புதன், 20 நவம்பர், 2013

உலகின் டாப்10 பார்கள்.

அர்த்தசாஸ்திர கௌடில்யர்  மதுபான விற்பனைதனை அரசே எடுத்து நடத்தவேண்டும் என்ற உயரிய கருத்தினை கூறியதோடு மது அருந்தக்கூடிய மதுகூடங்கள்(பார்கள்) எவ்வாறு இருக்கவேண்டும் மற்றும் எவ்வாறு பராமரிக்கப்படவேண்டும் என்று அறவுரை கூறுகிறார்.நமது அரசோ அவர் கூறியதில் மதுகடைகளை டாஸ்மாக் மூலம் அரசே எடுத்து நடத்தி பாதி அறவுரையின் படி நடந்தாலும் மீதியான மதுக்கூட விசயத்தில் அவர்தம் கருத்தினை ஏற்காததோடு தனியார் வசம் பார் உரிமம்களை வழங்கி சுகாதாரக்கேடு நிறைந்த டாஸ்மாக் பார்களையே மதுப்பிரியர்களுக்கு வழங்கி வருகின்றது.இந்த கப் பான வறட்சி நிறைந்த பார்களை கண்டுவரும் நமது குடிப்பிரியர்களை இன்னும் வெறுப்பேற்றும் முகமாக உலகின் தலைசிறந்த பத்து பார்களை அறிமுகம் செய்கிறது நமது டாஸ்மாக் செய்திகள் தளம்..
                                                                                     
1 ) Cova d’en Xoroi, Minorca, (கோவண்டன் எக்ஸ்ரோய், மீனார்கோ)
மீனார்கோ தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு அழகான குன்றின் விளிம்பில் அமைந்துள்ள  இந்த பாரானது இயற்கையின் சுவர்க்கபூமியாக உள்ளது, இந்த குகையின் சுற்றுப்புறங்களையும் கண்கவர் காட்சிகள் நிறைந்த மதுகூடங்கள் இயற்கை அழகுடனே கூடிய கீற்று கொட்டகைகளின் அழகு காண கண்கொள்ளாது. இந்த கீற்று கொட்டகை பாரினில் அமர்ந்தபடியே அழகான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்க்கலாம். பல மதுபிரியர்கள் சூரிய உதயம் துவங்கி சூரிய அஸ்தமனம் வரை இங்கு மதுஅருந்தி விடுமுறையை கழிப்பர்.என்ன இந்த முறை உங்கள் விடுமுறை மீனார்கோ தானே…

ஞாயிறு, 3 நவம்பர், 2013

டாஸ்மாக் தீபாவளி

தீபாவளி நாளில்  விபத்து, பட்டாசு வெடியால் காயம் உட்பட பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி 108 ஆம்புலன்சுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்ததாகவும் அரசு மருத்துவமணைகளில் சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள், ஊழியர்கள் திணறியதாக செய்திகள் கூறுகின்றன.
தீபாவளி என்றவுடன் புத்தாடை இனிப்பு புதியதிரைப்படம் என்று இருந்த இளைஞர்கள் தற்பொழுது மிக அதிகமாக டாஸ்மாக் கடையே தீபாவளி கொண்டாடும் இடமாக கொண்டுள்ளனர்.
நல்ல நாள் என்பதால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் பணியினை கவனிப்பது ஓரு புறமும் சரி நல்லநாள் தானே மகிழ்வாக பிள்ளைகள் இருக்கட்டும் என கவனிக்க தவறுகின்றனர். இந்நிலையில் இளைஞர்கள் நண்பனின் பைக் மற்றும் பெற்றோரின் பைக்கை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் கடைநோக்கி படை எடுக்கின்றனர். இளைஞர்கள் சாதரணமாகவே டூவிலர்களை வேகமாக ஓட்டும் குணதிசியங்கள் கொண்டாலும் தன்னுள் இறங்கிய மதுவினால் இன்னும் அதிக வேகம் கொண்டு சாலைகளில் சாகசம் செய்து தன்னையும் பிறரையும் விபத்துகளில் ஆட்படுத்துகின்றனர்.