ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

நல்லோர் வாக்கு பொய்க்காது.2பெறுநர்,
மாண்புமிகு அம்மா அவர்கள்,
தமிழக முதலமைச்சர்,
சென்னை
தமிழ்நாடு.

அன்புள்ள அம்மாவுக்கு,

                     பொருள்:டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம்                       செய்ய வேண்டி விண்ணப்பம்

புதன், 12 பிப்ரவரி, 2014

‘சரக்கு சாமி!’


குவாட்டருக்கு மேட்டர் முடிக்கும்சாமி சத்தியமா குடிக்க மாட்டேன்என்று எந்த டாஸ்மாக் பிரஜையாவது இனி சத்தியம் செய்தால்... குடும்பத்தினர் குதூகலித்து விடவேண்டாம். ‘எந்த  சாமி மேல சத்தியமாஎன எதிர்கேள்வி கேட்பது அவசியம். இந்தபழங்குடிகளை பாதுகாப்பதற்கென்றே நம்மூரில் நிறைய சாமிகள் இருக்கிறது. அப்படி ஒரு  சாமி குறித்த அறிமுகம். (இந்தத் தளத்தில் செய்யாவிட்டால்... வேறு எந்தத் தளத்தில் செய்வது???)

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கிற உஜ்ஜயினி நகரம் - பாடங்களில் படித்த ஞாபகம் இருக்கா? - ரொம்ப விசேஷமானது. பல ஆயிரம் ஆண்டுகள்  பழமையானது. நிறைய கோயில்கள் இருப்பதால், இது புனித நகரமும் கூட. மக்களை பாதுகாக்க / பராமரிக்க, இங்கு பல தரப்பட்ட சாமிகள் இருந்தாலும்...  சூப்பர் ஸ்டார் சாமி என்றால், அது கால பைரவ சாமிதான். பல ஆயிரம் ஆண்டுகள் முன், பத்ரசேனன் என்கிற மன்னனால், ஷிப்ரா நதிக்கரையில் இந்த  கோயில் கட்டப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அழகழகான ஓவியங்கள், அலங்கரிக்கப்பட்ட மதில் சுவர்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், அதைத்  தவிரவும் இந்தக் கோயில் பற்றிப் பேச ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.