ஞாயிறு, 3 மார்ச், 2013

தொழிலாளர் பாதுகாப்பு தேசியதினமா?


பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி,பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி,பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி,பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் பலி டாஸ்மாக்கில் பணம் பாதுகாப்புக்கு கடையில் இரவுபடுத்து உறங்கிய கடைபணியாளர் தீ விபத்தில் பலி,வங்கியில் பணம் கட்ட சென்ற தொழிலாளிக்கு கத்தி குத்து,குடிமகன்களால் தொழிலாளிக்கு பாதிப்பு,பார் உரிமையாளர்களால் பாதிப்பு, இவற்றிக்கெல்லாம் மேலாக குடி அடிமையாகி டாஸ்மாக் தொழிலாளி மரணித்து வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருவது ஊடகங்களின் தினசரி செய்திகளாக வந்தாலும் இதற்கு மாற்றாக தொழிலாளர்கள் நலன் கருதி டாஸ்மாக் நிர்வாகம் எந்த நடவடிக்கையாவது எடுக்கின்றதா என்றால் ஏதுமில்லை.அவர்களின் முழுமூச்சான நடவடிக்கையானது விற்பனை இலக்கு, இலக்கு...இலக்கு இது மட்டுமே தாரகமந்திரம். இதற்காக மட்டுமே மேற்பார்வையாளர்கள் கூட்டம்,விற்பனையாளர்கள் கூட்டம் என பலக்கூட்டங்கள்.மார்ச் 4 தொழிலாளர் பாதுகாப்பு தேசியதினத்தில் கூட சென்னையில் நிர்வாக இயக்குனர் மற்றும் அதிகாரிகள் விற்பனை இலக்குஅதிகரிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகின்றது. இவ்வாறு தொழிலாளர்களின் உயிர்களை உறிஞ்சி இவர்களின் இலக்கினை அடைவது மட்டுமே இலக்காக கொணட டாஸ்மாக் நிர்வாகத்திற்குமார்ச் 4 தொழிலாளர் பாதுகாப்பு தேசியதினம் என்பதாவது தெரியுமா? அப்படி தெரியாத இந்த மார்ச்4 தொழிலாளர் பாதுகாப்பு தேசியதினம் வெறும் எழுத்தளவில் மட்டும் இருப்பது எதற்கு?
இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் பெயரளவில் வைத்துக் கொண்டு சீனாவினையும் ஜப்பானையும் தொழில்வளத்தில் வென்று வல்லரசு கனவு காண்பது பகல் கனவே.தொழிலாளர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கும் பொழுது அவர்கள் பணியாற்றுகின்ற பணியினது தன்மை பணியிடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்வது மீறி ஏற்படும் விபத்துகளில் பணியாளர்கள் எவ்வாறு நடந்துகொள்வது,   போன்றவைகள் எல்லாம் சொல்லி தரப்படுகின்றாத என்றால் கண்டிப்பாக இல்லை.சட்டப்படி 480 நாட்கள் தொடர்பணியாற்றிய பணியாளர்கள் பணிநிரந்தரப்படுத்தப்படவேண்டும் என்பது எப்படி
எழுத்தளவில்  மட்டும் உள்ளதோ அதை போலவே மார்ச் 4 தொழிலாளர் பாதுகாப்பு தேசியதினமும் இந்தியாவில் அனுஷ்டிக்கப்படுகின்றது. சரி உண்மையில் மார்ச் 4 தொழிலாளர் பாதுகாப்பு தேசியதினம் எவ்வாறு உருவானது?அன்று தொழிற்கூடங்களில் என்ன நடைபெறவேண்டும் என்பன பற்றி காண்போம்இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி தொழிலாளர்கள் பாதுகாப்பு தேசிய தினம் (National Safety Day, March 4 ) ஆக அனுசரிக்கப்படுகிறது.


தேசிய அளவிலான பாதுகாப்புக் குழு அமைப்பு 1966-ல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டதை அடுத்து,  நம் நாட்டில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. அடுத்து, 1972-ல் தேசிய பாதுகாப்பு தினம் அறிவிக்கப்பட்டது மும்பையை தலைமையகமாக கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. அரசியல்சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது.


தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்திய தொழிற்சாலைகளுக்கு விருதுகள் வழங்குகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மேம்பாட்டு விருதுகளையும் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறது.


தொழிலாளர்கள் விபத்துகள் இன்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல் நலன் உடனும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தத் தினத்தில் , தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  சிறப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள், கட்டுரை, பேச்சு, சுலோகன் போட்டிகள்,கருத்தரங்குகள், விநாடி-வினா, மாதிரி ஒத்திகைகள், பாதுகாப்பு குறித்த கலை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்.நடத்தி, வெற்றி பெறும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.


விமர்சன எதிர்பார்புடன்

 .ஷாஜஹான்.திருமங்கலம்.99425 22470.


கருத்துகள் இல்லை: