சனி, 22 மார்ச், 2014

டாப் 10 விமான பேரழிவுகள்

கடந்தகாலங்களை நோக்கும் நமக்கு மனிதனின் ஆதி மரபியல் குணங்களிலேயே வானில்பறப்பது என்பது அமைத்துள்ளதாகவே தெரியவருகிறது. ரைட் சகோதரர்கள் விமானத்தினை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நமது சங்க இலக்கியநூல்களிலும்,ராமாயன மகாபாரத இதிகாசங்களிலும்விமான பயன்பாடு இருப்பதாக காண்கின்றோம். மேற்கு நாடுகளில் ஏன்ஜல்ஸ் என பறக்கும் தேவதைகள் கதைகளும் அரபுநாடுகளில் குதிரைக்கு இறக்கை முளைக்க செய்து விண்னுலக பயணம் செய்தாக வரும் நிகழ்வுகளும் மனிதன் பறவைதனை போன்று உல்லாசமாக எல்லையே இல்லாமல் பறக்க ஆசைப்பட்டதன் விளைவினால் விமானபயணத்தினை இன்று அனுபவித்து வருகின்றான். பயணங்களில் ஏற்படும் விபத்துகளில் மற்ற போக்குவரத்துகளோடு ஓப்பிடுகையில் விமான பயணத்தின் கி.மி கணக்குகளின் அடிப்படையில் பார்கையில் விபத்துகளானது மிகக்குறைவு. 
ஆனாலும் சிலநேரங்களில் ஏற்படும் விபத்துகளில் பல இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது.தற்பொழுது மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையினை போன்று பலவிமானங்களின் நிலை என்னவென்று கூட தெரியாமல் முடிந்தும் இருக்கின்றது.உலகம் சந்தித்த விமானவிபத்துக்களை டாஸ்மாக் செய்திகள் தளமானது “டாப் 10 விமானவிபத்துக்கள் எனற தலைப்பில் வரிசைப்படுத்தியுள்ளோம் .

புதன், 19 மார்ச், 2014

மதுபான நிறுவனங்கள்டாஸ்மாக்நிர்வாகத்திற்கும் மதுபானநிறுவனங்களுக்கிடையே தற்பொழுது மறைமுக பனிப்போர் நடைப்பெற்று வருகின்றது.மதுபானங்களுக்கு விலையினை உயர்த்தி மதுபான நிறுவனங்கள் தொடர்ந்து கேட்டுவருவதுடன்,கொள்முதல் செய்த வாரங்களிலேயே பெற்றுவந்த காசோலைகளை மாதக்கணக்கில் இழுத்தடித்து கொடுப்பதற்கு எதிராகவும் ,மற்றும் தங்களது கம்பெனியின் சரக்குகள் சிராக டாஸ்மாக் நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்படவேண்டும் என்பதும் மதுபான நிறுவனங்களின் கோரிக்கை.
டாஸ்மாக்கில் எழுதப்படாத விதியாக எக்கட்சியினர் ஆட்சிக்கு வருகின்றனறோ அக்கட்சிக்கு சாதகமான மதுபான நிறுவனங்களிலிருந்து அதிக சரக்குகள் கொள்முதல் செய்யப்படுவது வாடிக்கை. சென்ற ஆட்சிகாலத்தில் மிடாஸ் நிறுவனம் தங்களது சரக்குகளை டாஸ்மாக் கொள்முதல் செய்யவேண்டி வழக்கு நடத்தியது.

செவ்வாய், 4 மார்ச், 2014

உலகின் டாப் 10 இனிப்பு

சாக்லேட் ,கேக் , ஐஸ்கிரீம் இவைகளை கண்டவுடன் கொடுப்பவன் யாரென்றெல்லாம் குழந்தைகள் பலரும் கவனத்தில் கொள்வதில்லை. பலகுழந்தை திருடர்களின் திருட்டிற்கான மூலப்பொருட்களே இதுதான். பெரியவர்களும் குறிப்பாக பெண்கள் இந்த  ஐட்டங்களை கண்டுவிட்டால் நாக்கில் எச்சில் ஊற குழந்தையாகவே மாறிப்போவார்கள்.பல காதலர்கள் தங்களது காதலியை சந்திக்க சாக்லேட் இன்றி செல்வதில்லை. என்னவென்று விசாரிக்கையில் “சங்கடம் தீர்க்கும் சாக்லேட் எனகாதலர்கள் கூறிவருகின்றனர். கணவனோ இரவு வீடு திரும்புகையில் ஸ்வீட் பாக்கெட் இன்றி வீடுதிரும்பினால் பிரச்சனை தான் ‘இனிப்பின்றி அமையாது இன்பம் என தத்துவம் பேசுகின்றனர்.இவ்வாறு இனிப்பு இல்லறத்தில் முக்கிய இடத்தினைபெற்றுள்ளது. உலகின் பத்து மிக விலை உயர்ந்த இனிப்பு க்களை உங்களுக்காக டாஸ்மாக் செய்திகள் தளம் தேடி தந்துள்ளது.