புதன், 5 மார்ச், 2014

உலகின் டாப் 10 இனிப்பு

சாக்லேட் ,கேக் , ஐஸ்கிரீம் இவைகளை கண்டவுடன் கொடுப்பவன் யாரென்றெல்லாம் குழந்தைகள் பலரும் கவனத்தில் கொள்வதில்லை. பலகுழந்தை திருடர்களின் திருட்டிற்கான மூலப்பொருட்களே இதுதான். பெரியவர்களும் குறிப்பாக பெண்கள் இந்த  ஐட்டங்களை கண்டுவிட்டால் நாக்கில் எச்சில் ஊற குழந்தையாகவே மாறிப்போவார்கள்.பல காதலர்கள் தங்களது காதலியை சந்திக்க சாக்லேட் இன்றி செல்வதில்லை. என்னவென்று விசாரிக்கையில் “சங்கடம் தீர்க்கும் சாக்லேட் எனகாதலர்கள் கூறிவருகின்றனர். கணவனோ இரவு வீடு திரும்புகையில் ஸ்வீட் பாக்கெட் இன்றி வீடுதிரும்பினால் பிரச்சனை தான் ‘இனிப்பின்றி அமையாது இன்பம் என தத்துவம் பேசுகின்றனர்.இவ்வாறு இனிப்பு இல்லறத்தில் முக்கிய இடத்தினைபெற்றுள்ளது. உலகின் பத்து மிக விலை உயர்ந்த இனிப்பு க்களை உங்களுக்காக டாஸ்மாக் செய்திகள் தளம் தேடி தந்துள்ளது. 


1) காதலர் வைர- சாக்லேட் கேக்

இந்த காதலர் வைர- சாக்லேட் கேக்கினை ஜப்பானிய கேக் தயாரிக்கும் நிறுவனம் ஆப்பிரிக்க துணைக்கண்டத்தின் வடிவில் அமைத்து கேக்கில் 2000 வைரங்களால் அலங்கரித்தனர் .இந்த கேக்கினை உருவாக்க மொத்தம் 5 மில்லியன் டாலர்கள் வரை செலவு செய்தனர் , இது உலகின் மிக விலையுயர்ந்த  இனிப்பு என சாதனை படைத்துள்ளது! அப்புறமென்ன ஸ்வீட் எடு கொண்டாட வேண்டியது தானே.


2 ) கிறிஸ்துமஸ் வைர கேக்
கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது கேக்.அந்தவகையில் உலகின் மிக பிரசித்தி பெற்ற கிறிஸ்துமஸ் கேக்கினை தயார் செய்வது யார் என்ற போட்டியில்  2005 ஆம் ஆண்டில்டோக்கியோவை  சார்ந்த கேக் வடிவமைக்கும் நிறுவனம் 6 மாத கால அவகாசம் எடுத்து  இரண்டு அடுக்கு அறுங்கோண கேக்கினை உருவாக்கி அதில் வைரத்தினால் அலங்கரித்து ஒரு கண்காட்சி யினை ஏற்படுத்தி அதில் ஏலமிட்டு 1.7 மில்லியன் டாலர்களுக்கு  விற்பனை செய்தது.


 3 ) ஸ்ட்ராபெர்ரி  அர்னாடு
ஸ்ட்ராபெர்ரி  என்பது பலருக்கும் பிடித்த பிளேவர் என்பது தெரியும்.இந்த அர்னாடு என்பது  நியூ ஆர்லியன்ஸ்ல் உள்ள புகழ்மிக்க உணவகமாகும். இதில் ஸ்ட்ராபெர்ரி $ 25,000 மதிப்பிற்கும்  , புதினா  போன்ற கீரிமினையும் உருவாக்கி ஒரு 4.7 காரட் ஊதா வைர த்தினை 18 காரட் தங்கம் இணைத்து பதித்துள்ளனர்.இதன் கலவையில் ஒயின் மது தோய்த்து இந்த கேக்கினை தயாரிக்க 1.4 மில்லியன் டாலர்கள் செலவானது.  

4 ) பிளாட்டினம் கேக்
பிளாட்டினம் கேக் பிளாட்டினம் நகை யின் மேன்மை குறித்தும் மற்றும் அழகு பெண்ணான  ஜப்பனீஸ் நடிகை  ரிக்கோகி பூச்சே புகழினை உலகிற்கு எடுத்து கூறுவதற்காக நடிகையின் காதலனால் உருவாக்கப்பட்டதாகும், இந்த கேக் பிளாட்டினம் சங்கிலிகள், கழுத்தணிகள் , ஊசிகளையும், பதக்கங்களையும் இணைத்து உருவாக்கிய மதிப்பிடமுடியாத காதலின் விலை உயர்ந்த நினைவு பரிசாகும் !


5 ) மூன்று இரட்டையர்கள் ஐஸ் கிரீம்
இந்த ஐஸ்கிரீம் பணக்கார மற்றும் சாகச பிரியர்களுக்கு மட்டும் ஒரு முழு விருந்து ஆகிறது ! மூன்று இரட்டை ஐஸ்கிரீம் கையில் கிடைக்க தன்சானியா உள்ள கிளிமஞ்சாரோ என்ற பனிப்பாறையில் பயணம் செய்து, கிளிமஞ்சாரோ உச்சிக்கு சென்றால் மட்டுமே வாடிக்கையாளர்கள் இந்த பிரத்தியேக ஐஸ்கிரீம் சுவைக்க முடியும். மேலும் இதில் நீங்கள் செலவழிக்கும்  ஒரு பகுதியை ஒரு ஆப்பிரிக்க அரசு நிதியாக செல்கிறது!


6 ) சாக்லேட் புட்டு
சாக்லேட் புட்டு தயாரித்த விதமே அலாதியானது. கருப்பு ஜெல்லி சாக்லேட் சேர்த்து பிஸ்கட் ஜகோட் உடன் மதுவை கலந்து , பின்னர் ஒரு தங்க உறை படிந்து மூடப்பட்டிருக்கும்  மற்றும் 2 காரட்கள் வெள்ளை வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இங்கிலாந்தின் முன்னணி ஹோட்டலின் கேக் தயாரிப்பாளர்களின் கைவண்ணத்தில் இந்த புட்டு தயாரிக்க $ 34,000 செலவாகிறது !


7 ) கோல்டன்  கேனோலி
ஒரு கேனோலி கேக்கானது குழாய் பேஸ்ட்ரி இனிப்பு வகை  இதை செய்ய $ 26,000 செலவாகும்! கேனோலியை  அமெரிக்கா கேன்சாஸ் லிருந்து செஃப் கேரி லேங்கேர்கோ செய்தார். இது கருப்பு சாக்லேட் வுடன் தங்க இலை வரை மூடப்பட்டிருக்கும் இதில் ரீகோடிகா சீஸ் , சாக்லேட் மற்றும் கேண்டி எலுமிச்சை நிரப்பப்பட்டிருக்கும்இந்த இனிப்பு மிக அற்புதமான பகுதியாக அமைந்திருக்கும் 

8 ) உறைந்த ஹாடி சாக்லேட்
நியூயார்க் உணவகமான செரென்ட்பிடி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொக்கோ  வகைகளை கொண்டும். இனிப்பு கிரீம்உருவாக்கி, உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான் களையும் கொண்டு தயாரித்து கரண்டியால் பரிமாறுவர் . இந்த உறைந்த ஹாடி சாக்லேட் $ 25,000 மதிப்பாகும்

9 ) கோட்டை ஸ்டில்ட்
இந்த இனிப்பிற்கு ஷாம்பெயின் அடிப்படையாகும்  , சமையல் தங்கம் , ஐரிஷ் கிரீம் , மா, மாதுளை செய்யப்பட்ட ஒரு இத்தாலிய வகையில் சமைக்க படுகின்றது. இதில்  ஒரு 80 காரட் நீல பச்சை நிறம் கல் இணைத்து உருவாக்கப்பட்டது இதனை உருவாக்க $ 14,500 செலவாகிறது. 

10 ) மக்ரோன்ஸ்
பிரான்ஸ் உலகம் முழுவதும் இதன் அழகான இனிப்பு சுவைக்கு அடிமையானது.உலகம் முழுவதும் பிரபலமானது ! இந்த இனிப்பானது பப்ஸ் களில்  நிமிடங்களில்  நிரப்பப்பட்டு செவ்வாய்க்கிழமை ஈஸ்டர் அன்று பரிமாறப்படும் இதன் தயாரிப்பு செலவானது $ 7.414 ஆகும் பிரஞ்சு பேஸ்ட்ரி செஃப்  களின் முக்கிய தயாரிப்பான மக்ரோன்ஸ்  வினிகர் , சிவப்பு ஒயின், பியர்களை களின் கலவையில் ஈஸ்டரினை சிறப்பு செய்கின்றது. ஒயின் மர்றும் பீர்களின் கலவையின் ருசியினை சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை இந்த  குடிமக்களுக்கு… 


கருத்துகள் இல்லை: