வெள்ளி, 23 மே, 2014

டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளதா?
தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே எடுத்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த நிதியாண்டில், "டாஸ்மாக்' மூலம் கிடைக்க வேண்டிய விற்பனை வருவாய், 1,400 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது. வருவாயைப் பெருக்க, மாவட்ட ஆட்சியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும்  தமிழக அரசு ரகசியமாக  உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அப்படியானல் டாஸ்மாக் விற்பனை உண்மையில் குறைந்துள்ளதா? என்பதனை அறியவே இக்கட்டுரை. தமிழகத்தில், 6,830 டாஸ்மாக் கடைகள் உள்ளன.. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான், தமிழகத்தில் அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்த பெரும்பாலும் பயன்படுகின்றன. 2003ல் மது விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசு எடுத்தபொழுது 3000கோடியாக அதன் விற்பனை இருந்தது. 2013ல் அதன் விற்பனை 22 ஆயிரம் கோடிரூபாயில் இருகின்றது. வருடந்தோறும் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு ஒன்றினை நிர்ணயம் செய்து அதனை நோக்கி ஊழியர்களை விரட்டுகின்றது.