ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

எட்டாகனி


மே தினம் 8மணி நேர வேலையை உறுதிசெய்ய உலகமெங்கும் ஏற்பட்டதொழிலாளர்களின் உன்னத புரட்சியின் பலனால் ஏற்பட்டது என்பதனை நாம் அறிவோம்.ஆனால் அது நமது இந்தியாவில் ஏட்டளவில் தான் உள்ளது என்பதும் நாம் அறிவோம் .ஆனால் தற்பொழுது தொழிலாளர் நலச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என பிரதமர் வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களை மனதில் வைத்துக்கொண்டு கூறிவருவது அந்த ஏட்டளவு சட்டங்களுக்கும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு இல்லையெனில் பங்கம் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

விற்பனை&சம்பளம் ஒப்பீடு


மதுபான விற்பனை வருவாய்

டாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் (2011-2012) ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுபான சில்லறை விற்பனை செய்யும் உரிமை அரசின் சொந்த நிறுவனமான டாஸ்மாக்குக்கு வழங்கும் முடிவு 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு, அரசு வருவாய் தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது.

18 ஆயிரம் கோடி வருவாய்: டாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.18 ஆயிரத்து 81 கோடி வருவாயாகக் கிடைக்கும் என தமிழக அரசு உத்தேசமாக மதிப்பிட்டுள்ளது.

அதில் ஆயத்தீர்வை வருவாயாக ரூ.9 ஆயிரத்து 956 கோடி, விற்பனை வரியாக ரூ.8 ஆயிரத்து 125 கோடி கிடைக்கும்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வாய்தா


வாய்தா இந்த சொல்தான் நமது இந்திய நீதிமன்றத்தின் தாரகமந்திரம்.நீதிமன்றங்கள் அனைத்தும் செயலற்ற கோமா உடலினை போன்றதொறு முறையில்செயல்பட்டுவருகின்றன. நீதிபதியிலிருந்து கடை நிலை ஊழியர் வரை சரிவர நியமிக்கப் படாமல் நீதிமன்ற அலுவலங்கள் தொழில் நுட்ப வசதியில் மிகவும் பின் தங்கிய நிலைகளில் உள்ளன.சென்ற வருடத்தில் எத்தனை நாள்கள் நீதிமன்றம் செயல்பட்டது என்றால் மிகவும் சொற்ப நாள்களே.


வாய்தா இந்த சொல்லுக்கு அடுத்தப்படியாக வக்கில்கள் பாய்காட் இவையே நீதிமன்றங்களில் அதிகம் ஒளித்த வார்த்தையாக இருக்கும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறும் நமது அறிவுஜீவிகள் இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் தாமததீர்ப்புகளாகவே உள்ளது என்பதனையும் தெரிவிக்கின்றனர்.முன்னாள் துணைமுதல்வர் இந்நாள் முதல்வரை வாய்தா ராணி என குறிப்பிட்டார்.இந்நாள்முதல்வரை பார்த்து நீங்கள் குற்றமற்றவர் எனில் விரைந்து வழக்கை நடத்தி குற்றமற்றவர் என நிருபிக்க கூறினார். தற்பொழுது தன் குடும்பத்தின் நில அபகரிப்பு வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசிமுடித்துள்ளார்.பணம் மற்றும் அரசியல் அதிகாரம் உடையவர்கள் நமது  நீதிமன்றங்களை நம்புவதும் இல்லை நீதிமன்றங்களால் பெரும்பாலும் இவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை ஆட்சியாளர்களின் ஊழல் விசாரனை அவர்களது வாழ்நாள் முழுமைக்குள் முடிவதில்லை.அவர்கள் தீர்ப்புகளுக்குள் ஊழலுக்கு மேல் ஊழல் செய்து ஊழலில் சாதனை புரிந்துவருக்கின்றனர்.மற்றும் குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்பவர்களுக்கு அவர்களது முதியவயதிலேயே விவாகரத்து கிடைக்கின்றது.கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  விரைவில் ஜாமினில் வந்து கோர்ட் நடவடிக்கையை வாய்தாக்கள் மூலமாக நீட்டித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை போல நீதிமன்றம் ஏற்றி இறக்குகின்றனர்.சொந்த தேவைக்கு இடங்களை காலி செய்யக்கூறும் இட உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் வாய்தாக்களால் தங்களது அந்திம காலங்களிலேயே தங்களது இடங்களை பெறுகின்றனர். இவ்வாறு நீதிமன்றங்கள் தூங்கும் மன்றங்களாக இருப்பதால் தான் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரித்து வருகின்றன.மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பெரும்பாலும் நீதிமன்றங்களை அணுகுவதை விட தாதாக்களை அணுகுவது அதிகரித்து வருகின்றது. இந்திய அரசு ராணுவத்திற்கு செலவழிப்பதை விட நீதிமன்றங்களை மக்கள் எளிதில் அணுகுகின்ற வகையில் நீதிமன்றங்களை நவீன படுத்த நீதிதுறைக்கு அதிக நிதிகளை ஒதுக்கி நாட்டில் பிரச்சனைகள் குறைக்கும் பொழுது நாடு வளர்ச்சிப்பாதையில் வீறுகொண்டு எழும்.இதை தான் திருவள்ளுவர்
"
வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்."
விளக்கம்:ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது ஆயுதங்கள் அல்ல: நீதி நெறி தவறாத சிறந்த ஆட்சி செய்யும் முறையே ஆகும்எனக்கூறுகின்றார்.


ஆங்கீலேயர்கள் ஆட்சியில் நீதிபதிகள் ஆங்கீலேயர்களாக இருந்தமையால் கோடைகாலங்களில் அவர்களால் பணியாற்ற முடியாத நிலைமை இருந்ததால் கோடைவிடுமுறை நீதிமன்றங்களுக்கு விடப்பட்டது.வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றும் கோடைவிடுமுறை என்றநிலை நீடிக்க செய்வது எந்தவகையில் நியாயம்.
நீதிக்கு என்ன விடுமுறை.   


முன்பு வாய்தா என்ற எனது கட்டுரை மூலம் நமது நீதிமன்றங்களின் தாமத செயல்பாட்டினை பதிவுசெய்தேன்.தற்பொழுது நம்மை விட அதிகம் மக்கள் தொகைகொண்ட சீனாவில் வழக்குகள் 21 நாட்களில் தீர்க்கப்படுவது குறித்த தகவல் அறிந்து அத்தகவலையும் நமது வலைப்பூ அன்பர்களுடன் பகிர்வதில் மகிழ்வுகொள்கிறேன்.                 
.ஷாஜஹான்.திருமங்கலம்.9942522470.