வெள்ளி, 15 ஏப்ரல், 2016

குடி குறைக்க குழு அமைக்குமா அரசு?

அரசுக்கு எச்சரிக்கை

வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் உலக சுகாதார நிறுவன அறிக்கை யின்படி மதுவின் தீமை குறித்து ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைக்காவிட்டால், நாங்களே குழு அமைத்து அந்த பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என நீதிபதிகள் தமிழக அரசை எச்சரித்துள்ளனர்.
பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழகத்தில் கடந்த 2003 முதல் தமிழக அரசு மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அரசின் வருமா னத்தை பன்மடங்காக பெருக்கு வதற்காக பள்ளிக் கூடங்கள், வழிபாட்டு தலங்கள் அருகிலும்கூட விதிமுறைகளை மீறி டாஸ்மாக் மது பானக் கடைகள் திறக்கப்பட்டுள் ளன. மதுபானங்களை வாங்க வயது வரம்பும் கிடையாது. இதனால், 2008-09 காலகட்டத்தில் ரூ. 10 ஆயிரத்து 601 கோடியாக இருந்த வருமானம், 2012-13-ல் ரூ.21 ஆயிரத்து 680 கோடியாக உயர்ந்துள்ளது. மதுவால் உயிரிழப் போரின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.