வெள்ளி, 15 ஏப்ரல், 2016

குடி குறைக்க குழு அமைக்குமா அரசு?

அரசுக்கு எச்சரிக்கை

வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் உலக சுகாதார நிறுவன அறிக்கை யின்படி மதுவின் தீமை குறித்து ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைக்காவிட்டால், நாங்களே குழு அமைத்து அந்த பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என நீதிபதிகள் தமிழக அரசை எச்சரித்துள்ளனர்.
பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழகத்தில் கடந்த 2003 முதல் தமிழக அரசு மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அரசின் வருமா னத்தை பன்மடங்காக பெருக்கு வதற்காக பள்ளிக் கூடங்கள், வழிபாட்டு தலங்கள் அருகிலும்கூட விதிமுறைகளை மீறி டாஸ்மாக் மது பானக் கடைகள் திறக்கப்பட்டுள் ளன. மதுபானங்களை வாங்க வயது வரம்பும் கிடையாது. இதனால், 2008-09 காலகட்டத்தில் ரூ. 10 ஆயிரத்து 601 கோடியாக இருந்த வருமானம், 2012-13-ல் ரூ.21 ஆயிரத்து 680 கோடியாக உயர்ந்துள்ளது. மதுவால் உயிரிழப் போரின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.


உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

உலக சுகாதார நிறுவனம், மதுப் பழக்கத்தை குறைக்கும் வகையில், மதுவின் தீமைகள் குறித்து பாட திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி மது விற் பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் 2014-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிக்கையை அமல்படுத்து வது குறித்து ஆராய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் தமிழக அர சுக்கு கோரிக்கை மனு கொடுத் தேன். இதுவரை பரிசீலிக்கப்பட வில்லை’’ என கோரியிருந்தார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர் வில் நடந்தது. அப்போது நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில், “மனு தாரர் கோரியபடி உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை அமல் படுத்துவது குறித்து ஆராய ஒரு குழுவை ஏற்படுத்த தமிழக அர சுக்கு பலமுறை வாய்ப்பு கொடுக் கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையில், இதுவரை தமிழக சுகாதாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலர்கள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

தற்போது தேர்தல் நேரமாக இருப்பதாலும், மது விற்பனை என்பது அரசின் கொள்கை முடிவாக இருப்பதாலும், தமிழக அரசுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பை தருகிறோம். எனவே தமிழக அரசு வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் இது தொடர்பாக ஆராய ஒரு குழுவை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கவில்லை என்றால், நாங்களே ஒரு குழுவை அமைத்து, உலக சுகாதார அமைப்பின் பரிந் துரைகளை அமல்படுத்துவது குறித்து உத்தரவிடுவோம்’’ என எச்சரித்துள்ளனர்.

  • இன்று மதுவிலக்கு பற்றி பேசும் முதல்வர் காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தின் போதே மதுவிலக்கு நோக்கி நடைபோட்டிருக்கலாம். குடி குறைக்க குழு அமைக்குமா அரசு என்று நாமும் நீதிமன்றமும் சிந்திக்கையில் வாரத்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் மது விற்பனை விகிதத்தினை அதிகரிக்க டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். மதுவிலக்கு குறித்து பேசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கின்றது. முடிந்தால் ஆட்சியாளர்கள் குழு அமைக்க வற்புறுத்தும் நீதிபதிகள் மீது கூட தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சுவர். உண்மையில் மதுஆலைகளை பினாமியாக நடத்துபவர்கள் ஆட்சியில் மதுவிலக்கு காணல்நீரே. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் கடைசி ஐந்தாவது ஆண்டில் ஒருசில கடைகளை அடைத்துவிட்டு மீண்டும் மக்களைச் சந்திப்பர். நம் தமிழகம் எப்பொழுதும் மதுவெள்ளத்தில் முழ்கியே கிடக்கும். இங்கு கேட்பார் இல்லை. மீட்பார் இல்லை….

கருத்துகள் இல்லை: