வெள்ளி, 6 செப்டம்பர், 2013

டாஸ்மாக் மாற்றங்கள்

டாஸ்மாக் இணை இயக்குநராக திரு.மோகன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்பு சென்ற ஆகஸ்டில் தினசெய்தித்தாள்கள் டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க முதல்வர் அம்மா அவர்கள் தனிக்குழு ஒன்றினை அமைத்து இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கொள்முதல் அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட டாஸ்மாக்கில் மாற்றங்கள் பல தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மாற்றங்கள் என்பது மாறாதது என்ற பொன்மொழிக்கேற்ப டாஸ்மாக்கில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசையாக காண்போம்.மாற்றங்களினால் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பயன்பெறுவதும் ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தின் நிலையில் மட்டும் மாற்றம் என்பதே ஏமாற்றமாக மட்டும் இருந்து வருவதினை பற்றிய கட்டுரை
சரக்கு குவிப்பு:

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை டாஸ்மாக் கடைகளுக்கு, சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக அதாவது, 60 - 90 நாட்களுக்கு தேவையான சரக்குககள் அனுப்பப்பட்டு வந்தது.இதனால், அதிகமான அளவிற்கு சரக்கு இருப்பு வைக்கப்படுவதால், பல இடர்பாடுகளை டாஸ்மாக் ஊழியர்கள் சந்தித்தனர்.