புதன், 3 ஜூலை, 2013

மதுகிண்ணங்கள்

சங்க கால குடிமகன்கள் தொண்டு தொட்டு நமது டாஸ்மாக் குடிமகன்கள் வரை தான் அருத்தக்கூடிய மதுவகைகளை அழகான குடுவைகளில் பாதுகாக்ககூடியவர்களாகவும் மற்றும் சிறந்த கோப்பைகளைக்கொண்டு மது அருந்தக் கூடியவர்களாக இருந்துவருவது அனைவர் அறிந்தது.பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற பழமையான சொற்றொடர் மூலம் பயன்படுத்தும் பாத்திரங்களில் முந்தைய சமுகத்தினர் அதிக கவனம் செலுத்தியது தெரியவருகின்றது. பண்டைய நாகரீகங்களை பற்றி தெரிவிக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அக்காலத்து மக்களின் பயன்பாட்டு பாத்திரபண்டங்களை கொண்டே நாகரீகத்தில் எந்த நிலைதனில் அம்மக்கள் இருந்தனர் என கூறுகின்றனர். பண்டைய கள் குடிக்கும் குடிமகன்களின் கள் அருந்தும் பாத்திரமான மண்குடங்கள் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டவைகளாக இருந்து வந்தது.கள் குடிமக்கள் தங்களது மீசையினை மிகப்பெரியதாக வளர்ப்பர்.இந்த மீசையினை கள் குடிக்கும்  மண்பானைகளில் விட்டபடியே கள்ளினை பருகுவர் அந்த பானையில் உள்ள தேனீகள் பூச்சிகளை வடிகட்டும் பில்டராக மீசைதனை பயன்படுத்தினர்.தற்போதைய பாண்டிச்சேரி மற்றும் கேரளா பகுதி குடிமக்கள் பிளாஸ்டிக் மக்குகளிலேயே கள் மற்றும் சாராயம் அருந்துகின்றனர்.தமிழக டாஸ்மாக் குடிமக்கள் பிளாஸ்டிக் கப்களிலேயே பார்கப்புகளுக்கிடையே குடித்து சாதனை படைத்து வருகின்றனர்.சரி வாருங்கள் கண்ணாடி மதுகோப்பைகளை பற்றி காண்போம்.

செவ்வாய், 2 ஜூலை, 2013

ஏமாற்று ஏலம்

 
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அமைந்துள்ள பார்களை நடத்துவதற்கான ஏலநடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.            இந்த ஏலத்திற்கான விண்ணப்பங்கள் டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும். இந்த விண்ணப்பங்களை சாமானியர்கள் யாரும் எளிதில் பெற்றுவிடமுடியாது. அந்தந்த ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்களிடம் டோக்கன் பெற்று வரும் நபர்களுக்கு மட்டும் தான் விண்ணப்ப படிவம்.அதே போன்று பார் ஏலநடவடிக்கைகளை பற்றி முக்கிய பத்திரிக்கைகளில் எல்லாம் விளம்பரம் இல்லை.யாருமே வாங்கிட முடியாத நாளிதழில் விளம்பர வெளியிடுவதோடு ஆளும்கட்சிக்காரர்களை தவிர்த்து மற்ற எவரும் கலந்துகொள்ள முடியாத நிலையினை ஏற்படுத்தி டாஸ்மாக் நிர்வாகம் ஏலத்தினை நடத்திவருகின்றது.