ஞாயிறு, 20 மே, 2012

பார் அவலம் பாரீர்.


டாஸ்மாக் மதுக் கடைகளில் பார் நடத்துவதில் அதிகாரிகளின் உடந்தையுடன் தனிநபர்கள் சில தில்லுமுல்லுகளைச் செய்து சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்தால், இத்துடன் மேலும் சில ஆயிரம் கோடி வருமானமும் கிடைக்கும்.உரிமம் இல்லாமல் நடக்கும் சுமார் 4000 பார்களால் இந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மற்றும் அரசியல் தலையிட்டின்றிபார் ஏலம் விடுவதன் முலம் அரசும் குடிமகன் களுக்கும் மிகுந்த லாபம் பெறலாம்.தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு பார் ஏலவிசயத்தில் சிண்டிகேட் அமைப்பதை தடுக்க டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.

                                           

சிண்டிகேட்டுகள் ஆதிக்கம்.

 மதுக் கடைகளை ஏல முறையில் தனி நபர்களுக்கு ஏலம் விட்டபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டு (சிண்டிகேட்) சேர்ந்து கொண்டு, குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏலம் கேட்காமல் இருந்தனர். இதனால் குறைவான தொகைக்கே கடைகள் ஏலம் போயின. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் மதுபான வியாபாரிகள் அபரிமிதமான லாபம் சம்பாதித்தனர்.


ஞாயிறு, 13 மே, 2012

எந்த கட்சி நம் கட்சி


இன்று தமிழகத்தில் நால்வர்கள் ஒன்றுகூடி பேசினால் பேசுபவர் தவறு செய்யும் அரசையோ,தவறு செய்யும் தலைவரையோ சாடி பேசினால் உடன் நீ எந்த கட்சி என்று எதிர் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழகத்து பத்திரிக்கை களும் தொலைகாட்சி நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒருகட்சியின் முகமூடியை அணிந்தே வளம் வருகின்றன.தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் அங்கம் வகிப்பவராகவோ அல்லது ஏதாவது தனிப்பட்ட கொள்கையுடைய அமைப்புகளின் ஆதரவாளராகவோ கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று முற்போக்காக சிந்திப்பதாக கூறிக்கொள்ளக்கூடிய கட்சியை சேர்ந்தவர்கள் கூட விரும்புகின்றனர்.ஆனால் உண்மையில் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையாளர்கள்  எந்த கட்சியையும் சேராதவர்களாகவே உள்ளனர் என்பதே உண்மை. உண்மையான அறிவுஜீவிகள் யாரும் எந்தக்கட்சியையும் கண்முடி தனமாக ஆதரித்து ஒருகட்சி சார்புடையவராக இருக்க வாய்ப்பே இல்லை.

திங்கள், 7 மே, 2012

மருத்துவமும் போராடி பெறு


கடலூரைச் சேர்ந்தவர் . பாலமுருகன். இவர் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

புதன், 2 மே, 2012

டாஸ்மாக் சிஐடியூ மாநில மாநாடு சிறப்பு செய்திகள்


தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியூ) 3-வது இரு நாள்கள் நடைபெறும் மாநில மாநாடு திருநெல்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளான திங்கள்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஜெயபிரகாசன் தலைமை வகித்தார். மாலைவரை அந்த அறிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.. இரண்டாம் நாளான மே 1 செவ்வாய் அன்று சம்மேளன பொதுச்செயலாளர் பழனிவேலு, சிஐடியு., உதவி பொதுச்செயலாளர் கருமலையான், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சம்மேளன தலைவர் ஜெயபிரகாசன், துணைத்தலைவர் ஆல்துரை, சிஐடியு., மாநில துணைத்தலைவர் ராஜாங்கம், மாவட்ட செயலாளர் மோகன், வரவேற்புக்குழு பொருளாளர் இளமுருகு உட்படபலர்பேசினர்.
 இறுதியாக சிஐடியூ மாநில பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான .சவுந்திரராஜன் எம்.எல்.., கலந்துகொண்டு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.