வெள்ளி, 1 மார்ச், 2013

மதி(து) மயக்(ங்)கும் அரசியல்வாதிகள்தமிழக அரசியல் களத்தில் இன்றைய திராவிடகட்சிகளின் துவக்க காலங்களில் அவர்கள் கொண்ட கொள்கை செய்த பிரச்சாரம் இன்று பெயரளவில் கூட அக்கட்சிகளில் இல்லை.அத்தோடு மட்டுமில்லாமல் தற்போதைய  உறுப்பினர்களுக்கு அவை தெரிவதும் இல்லை தெரிந்தாலும் அதை கொண்டு அவர்கள் கட்சியில் வளர்ச்சி அடையவும் வாய்ப்பில்லை. அதே நேரத்தில் கட்சிதலைவரின் வாரிசையும்,கட்சித்தலைமையை புகழ்பாடினால் மட்டுமே வளர்ச்சி.உதாரணமாக துவக்கத்தில் இவர்கள் கொண்ட கடவுள் மறுப்புகொள்கையாகட்டும், தனிமாநில கொள்கையாகட்டும், மது ஒழிப்பு கொள்கையாகட்டும் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு பன்னெடும்காலமாகிவிட்டது.இதுப்பற்றி எந்த
தமிழ்குடிமகனும் கவலையும்,நினைவில் வைத்து கேள்வி கேட்பதும் இல்லை.தமிழகமக்களின் ஞாபக மறதியே இன்றைய அரசியல்வாதிகளின் வளர்ச்சியின் துவக்கப்புள்ளி. சரி விசயத்திற்கு வருவோம்.

தற்பொழுது தமிழகத்தில் பலகட்சிகள் மதுவிலக்கினை தங்களது கொள்கையாகவும் ,பிரச்சாரமாகவும் செய்துவருகின்றனர்.உயர்ந்த கொள்கைதான் ஆனால் உண்மைநிலை என்ன? உலகம் முழுவதும் எங்குமே முழுமதுவிலக்கு இல்லை.உலக அளவில் எடுத்துக்கொண்டால் சவுதி அரேபியா, இந்தியாவினை எடுத்துக்கொண்டால் குஜராத் என்பர் மதுவிலக்கு ஆதரவாளர்கள் ஆனால் உண்மைநிலை அங்கே உள்ள பொருளாதார சிறப்பு மண்டலங்கள் என்றும் வயதானவர்களுக்கு சிறப்புசலுகை என்றும் மது தாராளமாக கிடைத்து வருவது ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.இந்த அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும்,மதுவிலக்கு சாத்தியமில்லை என்று ஆனால் ஏன் இவர்கள் இதை கையில் எடுக்கின்றனர். பதவி ஆசைதான்.தமிழக அரசியல் வரலாற்றில் மதுவினை எதிர்த்து பிரச்சாரம் செய்து பின்பு ஆட்சியில் அமர்ந்தவுடன் மதுவிற்பனை செய்தமை மக்கள் மறந்தாலும் இதே தொழிலாக கொண்ட அரசியல்வாதிகள் மறந்திருக்கமாட்டார்கள் அல்லவா? இவர்கள் முந்தையவர்கள் ஆட்சியில் அமர்வதற்கு என்னனென்ன விசயங்ககளை கையில் எடுத்தார்களோ அதை அனைத்தினையும் இவர்கள் தற்காலத்திற்கு  தகுந்தமுறையில் கையிலெடுத்துவருகின்றனர்.
பூரணமதுவிலக்கிற்காக
.தி.மு. நடைப்பயணம்,
பா.. பூட்டுபோடும் போராட்டம்,
.. முற்றுகைப் போராட்டம்,
ஒருபுறம் அரசியல்வாதிகள் விதவிதமாக போராடினாலும்,
மறுபுறம் மதுவின் தோற்றம் அரசியல்வாதிகளால் தான்.
மதுக்கூடம் நடத்தினால் மாவட்ட செயலாளர் பதவி,
மது ஆலை நடத்தினால் மாநில செயலாளர் பதவி,
என அரசியல் நடத்திடும் நிலை தமிழகத்தில்
மதுவிற்கு எதிரானவர்கள் சாதி,மத,இன அரசியலில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் மதுஒழிப்பு பற்றிய விவாதத்தில் கலந்துகொண்ட காந்தி மக்கள் இயக்கத்தலைவர் மரியாதைக்குரிய தமிழருவிமணியன் அவர்கள் மதுவிற்பனையால் தமிழகத்தில் யாருக்கு லாபம் என்பதனை மிகவும் தெளிவாகவும் தைரியமாகவும் தெரிவித்தார். அவர்கூறியதாவது,மிடாஸ் இது 3கோடியில் துவங்கி இன்று 14000கோடி அரசிற்கு மதுவகைகளை விற்றுவருகின்றது மற்றும் சென்ற ஆட்சியாளர்களின் பிரதிநிதியை கொண்டு எலைட் டிஸ்டில்லர்ஸ் செயல்படுவதாகவும் கூறினார்.இதிலிருந்து தி.மு.கவும் .திமு. வும் ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் மதுவினை ஒழிக்கமுடியாது என்பது தெளிவு. அப்படியென்றால் இந்த மதுவிற்கு எதிரான அமைப்புகள் என்றும் இந்த இரண்டுகட்சிகளிடம் கூட்டணி வைக்ககூடாது.இதை முதலில் இவர்கள் பகிங்கரமாக அறிவிக்கத்தயாரா?
.தி.மு. பொதுசெயலாளர் வை.கோ அவர்கள் மதுவிலக்கிற்காக நடைபயணம் மேற்கொள்கின்றார்.திடீரென நடுவழியில் முதல்வர் அம்மா அவர்களை சந்திக்கின்றார்கள். அவர்கள் இருவரும் உடல்நலம் விசாரிக்கின்றார்கள்.சிலநாட்கள் கழித்து வரக்கூடிய அம்மா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து கூறும் மரியாதைக்குரிய வை.கோ அவர்கள் அவரின் நடைபயண நோக்கத்தினை கூறி உடன் நிறைவேற்ற மனு வழங்கியிருக்கலாம்  அல்லவா? அவருக்கு தெரியும் நடைமுறை
சாத்தியமற்றது மதுவிலக்கு என்று.சரி விடுங்கள் இப்பொழுது அறிவிக்க சொல்லுங்கள் மதுவிலக்கு கொள்கையை தி.மு.கவும் .தி.மு. வும் ஏற்றால் மட்டுமே இவர்கள் இருவருடன் கூட்டணி என்று.
அடுத்ததாக தமிழருவி அய்யா அவர்களிடம் கடந்த சட்டமன்றதேர்தலில் அம்மா அவர்களை ஆதரித்தீர்கள் இனி எப்பொழுதும் மதுவினை ஆதரிக்கும் இந்த இரண்டுகட்சிகளையும் நீங்கள் ஆதரிக்ககூடாது. அடுத்ததாக பா.. இந்த கட்சியினை தமிழக மக்கள் கொஞ்சம் அறிந்து தான் வைத்துள்ளனர்.இருந்த பொழுதும் அய்யா ராமதாஸ் அவர்களும் இனி எந்த காலங்களிலும் மதுவினை ஆதரிக்கும் இந்த இரண்டு கட்சியுடனும் கூட்டணியில்லை என அறிவிக்கட்டும்.ஆனால் தமிழக மக்கள் இப்படி இவர் அறிவித்தால் தான் சந்தேகம் அடைவர் கூட்டணிக்கு அழைக்கிறார் என்று ஊடகங்கள் செய்தியும் வெளியிட்டுவிடும்.ஏன் எனெனில் வாக்குறிதிகளுக்கு மாறுசெய்வதிலும்,கூட்டணி மாறுவதிலும்,
தமிழக அரசியல் களத்தில் இவருக்கு நிகர் எவருமில்லர்.அடுத்ததாக காங்கிரஸ்,.. இவைகளுக்கும் இதே கோரிக்கையை தான் டாஸ்மாக் தளம் வேண்டுகின்றது.
உண்மையில் இவர்களின் கட்சிக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளின் வசூலைக்கொண்டே இவர்களின் மதுவிலக்கு கொள்கையினை அறியலாம்.

தற்போதைய தமிழக அரசியல் தலைவர்கள் வெகுவான அலங்கார பேச்சினையும் நடைமுறை சாத்தியமற்ற விசயங்களையும் மக்கள் முன் கொண்டு சென்று எப்படியும் ஆட்சிகட்டினில் அமர்ந்துவிட துடிக்கின்றனர். இவர்கள் மதி மயக்கும் அரசியல்வாதிகள் தற்பொழுது மதுவினை
கையில் எடுத்திருப்பதனால் மது மயங்கும் அரசியல்வாதிகளாவர்.


தொடர்புடைய கட்டுரை.

மதுவிலக்கு சாத்தியமா?
விமர்சன எதிர்பார்புடன் .ஷாஜஹான்.திருமங்கலம்.99425 22470

3 கருத்துகள்:

ச.மே.இளஞ்செழியன் சொன்னது…

தமிழ்நாடு முழுவதும் விசமருந்து (பாய்சன்) கடைகளை திறந்து வைத்தால் அனைவரும் இதே போல் குடிக்க முன் வருவார்களா ? மதுவை ஒழிக்க அரசியல்வாதிகள் நாடகமாடுகின்றனர்.சரி ஆடிவிட்டு போகட்டும். யாருக்கு மதுவிலக்கு தேவை... அரசியல்வாதிகளுக்கா ? அதனால் அவர்களுக்கு என்ன நன்மை இதெல்லாம் அனைவரும் அறிந்ததே. எனக்கு ஒரு பாடல் வரிகள் மட்டும் ஞாபகம் வருகிறது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதுபோல் குடிப்பவர்கள் திருந்தாமல் குடியை...மதுவை ஒழிக்க முடியாது.

ச.மே.இளஞ்செழியன் சொன்னது…

மதுவை ஒழிக்க அரசியல்வாதிகளின் குரல் அவ்வபொழுது ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் அது நடைமுறை படுத்தப்படுமா என்பது மது குடிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்பதெல்லாம் ஆடத் தெரியாதவர்களுக்கு தெரு கோணலாம் என்ற கதை தான். எனக்கு ஒரு பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதுபோல் மது குடிப்பவராய் பார்த்து திருந்தா விட்டால் மதுவை ஒழிக்க முடியாது.

ச.மே.இளஞ்செழியன் சொன்னது…

மதுவை ஒழிக்க அரசியல்வாதிகளின் குரல் அவ்வபொழுது ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் அது நடைமுறை படுத்தப்படுமா என்பது மது குடிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்பதெல்லாம் ஆடத் தெரியாதவர்களுக்கு தெரு கோணலாம் என்ற கதை தான். எனக்கு ஒரு பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதுபோல் மது குடிப்பவராய் பார்த்து திருந்தா விட்டால் மதுவை ஒழிக்க முடியாது.