திங்கள், 4 நவம்பர், 2013

டாஸ்மாக் தீபாவளி

தீபாவளி நாளில்  விபத்து, பட்டாசு வெடியால் காயம் உட்பட பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி 108 ஆம்புலன்சுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்ததாகவும் அரசு மருத்துவமணைகளில் சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள், ஊழியர்கள் திணறியதாக செய்திகள் கூறுகின்றன.
தீபாவளி என்றவுடன் புத்தாடை இனிப்பு புதியதிரைப்படம் என்று இருந்த இளைஞர்கள் தற்பொழுது மிக அதிகமாக டாஸ்மாக் கடையே தீபாவளி கொண்டாடும் இடமாக கொண்டுள்ளனர்.
நல்ல நாள் என்பதால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் பணியினை கவனிப்பது ஓரு புறமும் சரி நல்லநாள் தானே மகிழ்வாக பிள்ளைகள் இருக்கட்டும் என கவனிக்க தவறுகின்றனர். இந்நிலையில் இளைஞர்கள் நண்பனின் பைக் மற்றும் பெற்றோரின் பைக்கை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் கடைநோக்கி படை எடுக்கின்றனர். இளைஞர்கள் சாதரணமாகவே டூவிலர்களை வேகமாக ஓட்டும் குணதிசியங்கள் கொண்டாலும் தன்னுள் இறங்கிய மதுவினால் இன்னும் அதிக வேகம் கொண்டு சாலைகளில் சாகசம் செய்து தன்னையும் பிறரையும் விபத்துகளில் ஆட்படுத்துகின்றனர்.


மதுரை சம்பவம்.
மதுரையில் அதிவேகத்தில் சென்ற 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 2 பேர் பலியாகினர்; 2 பேர் காயமடைந்தனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மதுரை அரசரடியை சேர்ந்தவர் திலீபன்,25. சென்னையில் ஒரு காப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தீபாவளி கொண்டாட மதுரை வந்தார். மாலை 5 மணிக்கு ஒரு டூவீலரில், நண்பர் ஒருவருடன் பழங்காநத்தம் டி.பி.கே.,ரோட்டில் சென்றார். அழகப்பன்நகர் ரயில்வே கேட் அருகே, எதிரே ஒரு டூவீலரில் 2 பேர் வந்தனர். இரு டூவீலர்களும் அதிவேகமாக வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்தில் திலீபன் பலியானார். மதுரை அரசு மருத்துவமனையில் பழங்காநத்தம் கண்ணன், 22,இறந்தார். அழகப்பன் நகர் வினோத் பழனிக்குமார் உட்பட 2 பேர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் நண்பர்கள், உறவினர்கள் 15 பேர் சம்பவ இடத்தில் கூடினர். அவ்வழியே ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு அவசரமாக, மதுரை நோக்கிச்சென்ற 108 ஆம்புலன்ஸை வழிமறித்து, "காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்' என்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர்,"" உள்ளே இருக்கும் நோயாளியை காப்பாற்ற அவசரமாகச் செல்ல வேண்டும். மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்,'' என்றார். இதனால், ஆத்திரத்தில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். அருகே உள்ள நித்திலா நர்சிங் ஹோமில், திலீபனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், என வற்புறுத்தினர். டாக்டர்கள்,"திலீபன் ஏற்கனவே இறந்துவிட்டார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்,' என்றனர். இதை சகித்துக்கொள்ள முடியாமல் ரகளையில் ஈடுபட்டனர்.

அதே மருத்துவமனையில், வினோத் பழனிக்குமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகையில் ""அவர் மது அருந்தியுள்ளதால், மருந்து வேலை செய்யவில்லை,'' என்றார். ரகளையில் ஈடுபட்ட 15 பேரையும், சுப்பிரமணியபுரம் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.
இச்சம்பவங்களை பெற்றோர்கள் தங்களுக்கான பாடமாக கருதி அடுத்த தீபாவளியானது விபத்தில்லா தீபாவளியாக அமையசெய்யவேண்டும். அரசும் டாஸ்மாக் கடையினை தவிர்த்து வருவாய்க்கான வழிவகையினை ஏற்படுத்தி மதுவிலக்கினை நோக்கி பயணிக்கவேண்டும்.மக்களும் மதுதயாரிப்பு கம்பெனி முதலாளிகளை ஆட்சியாளர்களாக தேர்த்தெடுப்பதினை தவிர்க்கவேண்டும்.


4 கருத்துகள்:

ஹரி சொன்னது…

நண்பர்க்கு வணக்கம்,
தங்கள் கருத்துக்கள் டாஸ்மாக் செய்திகளை தெரிந்துக் கொள்ளமுடிகிறது. இருந்தாலும் இன்னும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை விற்று வருகின்றனர். இதை கட்டுப்படுத்த முடியாத? இது குறித்து தங்கள் கருத்து என்ன? மேலும் டாஸ்மாக்கில் நேர்மையான அதிகாரி இணை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார் இவருடைய செயல் பாடு டாஸ்மாக்கை ஒழுங்கு படுத்துமா?

டாஸ்மாக் செய்திகள் சொன்னது…

நன்பருக்கு நன்றி நமது டாஸ்மாக் செய்திகள் தளத்தில் "கூடுதல்விலை விற்பனைக்கு யார் காரணம் "என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படிக்கவும்.இனண இயக்குநரால் சில நன்மைகள் நடந்தாலும் டாஸ்மாக்கினை ஓழுங்குப்படுத்த ஊழியர்கள் பணிநிரந்தப்படுத்தி சரியான ஊதியம் வழங்கிய பின்பு தவறிளைப்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

Ungal pathilil thelivillai
inai iyakkunar seyalpaadu patri theriyavillai endru purigirathu.ungal katturai oru pakamaaga ullathu.ithatkku adhu sariyaana
vidaiyillai
insha vaara thuklak pathirikayil sendra vaara parakkum padai paaraatiyullanar
yen ungal thozhirsanga vaathigalai patri ezhuthuvathillai?s r m sambaathiththathu ivargalukku theriyaamalaa?

டாஸ்மாக் செய்திகள் சொன்னது…

நண்பர் முதலில் டாஸ்மாக் செய்திகள் கட்டுரை அணைத்தினையும் படிக்கவும். சங்கடம் தீர்க்குமா? சங்கங்கள் என்ற தலைப்பில் சங்கதோழர்கள் நடத்தைகளை பற்றிகூறியுள்ளேன்.srm மற்றும் அதிகாரிகள் சம்பாரிப்பதும் ஆளும் கட்சியினர் சம்பாரிப்பது குறித்து சங்கத்தினரும் நானும் பலமுறை தலைமைசெயலகத்திற்கும் மனு எழுதியுள்ளோம்.அதன் மீது தான் விசாரனை நடைபெற்றுவருகின்றது.