திங்கள், 26 மார்ச், 2012

பாண்டிங்கைபாரட்டுவோம்


பாண்டிங்கைபாரட்டுவோம்
இந்தியர்களிடையே உங்களின் பொழுதுபோக்கு என்ன என வினாவினால் ஆறுபது சதவிதத்தினருக்கு மேல் கிரிக்கெட் பார்ப்பது என்றே கூறுவர் அதுவும் இந்தியாஇளைஞர்களிடையே கேட்டால் இன்னும் சதவிதம் உயரும்.இந்தியா இளைஞர்களின் உயிர்துடிப்பே கிரிக்கெட்,கிரிக்கெட் தான்.அது மட்டுமல்ல இந்தியகிரிக்கெட்ரசிகர்கள்இந்தியகிரிக்கெட் விரர்களின் விளையாட்டை ரசிப்பது போல் மற்ற நாட்டுகிரிக்கெட் விரர்களின் விளையாட்டினையும் மிகுந்து ரசித்து வருகின்றன.இந்தியகிரிக்கெட் ரசிகர்கள் நாடுகள் தாண்டியும் திறமையான விரர்களை ரசிப்பதில் நாகரிகம் மிகுந்தவர்கள்.பாகிஸ்தான் ஏதிரி நாடு என அறியப்பட்டாலும்சென்னையில்நடைபெற்றகிரிக்கெட்போட்டியில் சையதுஅன்வரின் சிறப்பான விளையாட்டிற்க்கு அரங்கமே எழுந்துநின்று பாரட்டியது நமது கிரிக்கெட் ரசிகர்களின் நாகரிகத்திற்கு சிறந்த
எடுத்துக்காட்டு.இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் விரும்பும் விரர்கள் வரிசையில் பாண்டிங் முக்கியமானவர் ஆவார். ஏன் எனில் கிரிக்கெட்டில் பல விரர்கள்விளையாடி சென்றாலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பாண்டிங். அவரின் சாதனைகளை முறையடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதில் எந்தசந்தேகமும்இல்லை.இந்தியாவில் பாண்டிங் பிறந்துஇருந்தால் கண்டிப்பாக அவருக்கு இந்திய ரசிகர்கள் கோயில்கட்டி வணங்கியிருப்பர்.இவர் 2003ல் உலககோப்பை இறுதி ஆட்டதில்நமது இந்தியாவிற்கு எதிராக அவர் அடித்த140 ரன்கள் முலம் நம்மிடமிருந்து கோப்பையை பறித்தது என்றும் நம் இந்திய ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு இரு உலகக் கோப்பைகளை வென்று தந்த மாபெரும் கேப்டனான பாண்டிங்கின் சகாப்தம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு முடிவுக்கு வந்தது.

சிட்னியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர் கூறியது: ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையில், ஓய்வுபெறுவதாக அறிவிப்பது சற்று கடினமாகவே உள்ளது. இனிமேல் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்வுக்குழுவினர் இனிமேல் என்னை அணிக்குத் தேர்வு செய்யமாட்டார்கள் என்று தெரியும். இப்போதைய சூழலில் ஓய்வுபெறுவதில் எனக்கு எவ்வித கசப்புணர்வும் இல்லை. நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 2015 உலகக் கோப்பைக்காக அணியை பலப்படுத்தி வருகின்றனர். அவர்களின் அந்தத் திட்டத்தில் எனக்கு இடமில்லை என்றார்.

இருப்பினும் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறிய அவர், "தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி, உள்ளூர் அணியான டாஸ்மேனியா அணிக்காகவும் விளையாடுவேன். எல்லா போட்டிகளிலுமே நான் என்னை நிரூபித்துவிட்டதாகவே கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் தகுதி எனக்கு இப்போதும் இருக்கிறது. அதை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிரூபித்தேன்' என்றார்.

"உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அணியைத் தயார்படுத்தி வருவதால் எனக்கு இடமில்லை என்பதை அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜான் தெளிவாக என்னிடம் தெரிவித்துவிட்டார்' என்றார் பாண்டிங்.

இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்த பாண்டிங், "இனி வரும் காலங்களில் டெஸ்ட் போட்டிக்கு எப்படி தயாராவது என்ற சிந்தனைதான் திங்கள்கிழமை என்னுடைய எண்ணத்தில் இருந்தது. ஒருநாள் போட்டி நிச்சயம் எனக்கு கடினமான சூழலை ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பல வீரர்கள் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளனர். முன்னாள் கேப்டன்கள் ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர், டேவிட் பூன் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர்' என்றார்.

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 375 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 சதம், 82 அரை சதங்களுடன் 13,704 ரன்கள் குவித்துள்ளார்.

1995-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் பாண்டிங். அதன்பிறகு தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் 2002-ல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனானார். 2003 மற்றும் 2007-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையைப் பெற்றுத்தந்தார். இதன்மூலம் மூன்று உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற வீரர் என்ற பெருமையயும் அவர் பெற்றார். 2003 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 140 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். டெஸ்ட் போட்டியில் இவருடைய தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தொடச்சியாக 16 போட்டிகளில் வென்றுள்ளது. இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 162 ஒருநாள் போட்டிகளிலும், 48 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர். சாதனைகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான பாண்டிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த ஆண்டில் சரிவுக்குள்ளானது. கடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா காலிறுதியோடு வெளியேறியது. அதன் எதிரொலியாக கேப்டன் பதவியைப் பறிகொடுத்தார். முத்தரப்புத் தொடரின் சரியாக விளையாடாததால் ஏற்பட்ட நெருக்கடியில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார் பாண்டிங்.பேட்டிங்க் இருக்கும்வரை பாண்டிங் மறக்கப்படுவதுஇல்லை..ஷாஜஹான், திருமங்கலம்

கருத்துகள் இல்லை: