திங்கள், 27 பிப்ரவரி, 2012

நடப்பு செய்திகள்


டிஸ்மிஸ்

டாஸ்மாக் மேலாளராக நியமிக்கப்பட்ட எம்பிஏ பட்டதாரிகள் 6 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்து 600 டாஸ்மாக் கடைகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கடை, பார் சூபர்வைசர், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என 35 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். முதலில் துணை கலெக்டர் அந்தஸ்தில் மாவட்ட மேலாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2004ம் ஆண்டில் எம்பிஏ பட்டதாரிகள் 32 பேர் தேர்வு செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மேலாளராக பணிய மர்த்தப்பட்டனர்.

தொடர்ந்து 32 எம்பிஏ பட்டதாரிகள் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது டாஸ்மாக்கில் மேலாளராக இருந்த அவர்கள் முறையாக நியமனம் செய்யப் படவில்லை என்று கூறி 32 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் துணை கலெக்டர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் மாவட்ட மேலாளர் பணியை கவனித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் கடந்த டிசம்பர் மாத கடைசியில் முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட எம்பிஏ பட்டதாரிகள் 32 பேருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இதில் முதல்கட்டமாக 16 பேர் பணி அமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 16 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக பணியாற்றி வந்த 16 பேரில் 6 பேரை திடீரென டாஸ்மாக் மாநில நிர்வாக இயக்குனர் சவுண்டையா பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை வடக்கு மாவட்ட மேலாளர் மாரிமுத்து, தெற்கு மாவட்ட மேலாளர் புஷ்பலதா, நீலகிரி மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான், கரூர் பாலமுருகன், கன்னியாகுமரி மனோகர், புதுகோட்டை ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்குவர்.
டாஸ்மாக் தே.மு.தி..நிர்வாகக்குழு கூட்டம் டாஸ்மாக் தே.மு.தி. நிர்வாகிகளின் கூட்டம் அதன் அலுவலகம் மாப்பாளையத்தில்26.02.2012 அன்று மாலை 4 மணிக்கு நடைப்பெற்றது.கூட்டத்திற்கு மதுரை
மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையேற்க மாவட்ட செயலாளர் சையது முகம்மது சுலைமான் கிழ்கண்ட திர்மானங்களை கொண்டுவந்து நிர்வாகிகளால் நிறைவேற்றப்பட்டது.தற்பொழுது கடைகளில் மேற்பார்வையாளர்கள் தேவைப்பட்டியல் வழங்காமலேயே சரக்குகளை குவித்து வருவதையும் ,கடைகளில் நின்று வியாபாரம் செய்ய இடமின்றி சரக்குகளை இறக்குவதையும் கண்டித்தும்,விற்பனை குறைவிற்கு சரக்குபோடும் அதிகாரிகளே முழு பொறுப்பேற்கவும்,மதுபான கிட்டங்கிகள் மற்றும்போக்குவரத்தில் ஏற்படும் பாட்டில் குறைபாடு தவறுகளை உடன் களையவும்,கடையின் மின்சார கட்டணம் முழுவதையும் நிர்வாகமே செலுத்த வேண்டும் எனவும், பார்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துகளில் தனியார்களின் ஆதிக்கத்தை குறைத்து அரசே ஏற்றுநடத்தவும்,முறையற்ற பகுதி மேற்பார்வையாளர் நியமனத்தினை உடன் ரத்து செய்யவும், கூடுதல் விற்பனையில் அப்பாவி விற்பானையாளர்கள்,மேற்பார்வையாளர்கள் மட்டும் பாதிக்கப்படும் பொழுது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும்,
பணிநிரந்தரம், மத்தியமாநில அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம்,பணிபாதுகாப்புபோன்றவைகளை தேர்தல் முன்பு வாக்களித்தப்படி நிறைவேற்ற வேண்டியும் திர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.இக் கூட்டத்தில் சுரேஸ்,கோபால்சாமி,பூமிநாதன்,அழகு முத்துராமலிங்கம்,மணிகண்டன்,நாகராஜ்,பூங்கொடிஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சங்க பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.இச்செய்தியினை டாஸ்மாக் தே.மு.தி. சங்க கொள்கை பரப்புசெயலாளர் டபிள்யூ. ஷாஜஹான் கூறினார்.

கருத்துகள் இல்லை: