ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

முட்டாள்கள் தினம்


பள்ளி பருவகாலங்களில் ஏப்ரல்1 என்றால் பள்ளிசீருடையை நன்பர்களின் பேனா மையிலிருந்து காப்பாற்றுவது மிக கடினம்.வடநாட்டினரின் ஹோலி பண்டிகையும் மிஞ்சூம் வகையில் நமது மாணவர்கள் இந்நாளில் முட்டாள்கள் தினம் ஏப்ரல் பூல் என கூறி சக மாணவர்களை ஏமாற்றி மகிழ்வர்.இந்நாளில் பிரபல பத்திரிகைகள் தங்களது வாசகர்களை முட்டாள்களாக்க முண்ணணி நடிகைக்கு ஏய்ட்ஸ் எனவும்,அரசியல் கூட்டணி பிளவு என்றும் தலையங்கம் வைத்து பின் பகுதியில் இன்று ஏப்ரல்1 முட்டாள்கள் தினம் என கூறி இந்நாளை பிரபலப்படுத்துவர்.இன்று மனிதன் பலரையும் ஏமாற்றி எப்படியும் முன்னேற துடிக்கின்றான்..இந்த முட்டாள்தினம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை காண்போம்.
ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.
ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களைமுட்டாள்கள்எனும் கருத்துப்பட அன்றைய நாள்முட்டாள்கள் தினம்என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது
எப்படியோ முட்டாள்கள் தினம் தோன்றிய பொழுதும் மக்கள் பெருமளவு ஏமாறுவது மத புரோகிதர்கள், அரசியல்வாதிகள், பணங்களை பன்மடங்காக பெருக்கி தருவதாககூறும் பைனான்சியர்களிடமே. இம்முவர்களையும் நமது வசதியை பெருக்கி கொள்ளுவதற்காக நாமே தேடி சென்று ஏமாறுகின்றோம்.புரோகிதர்களின் ஏமாற்றம் தமிழகத்தை பொறுத்தவரை கொஞ்சம் குறைவு தான் காரணம் தந்தை பெரியார் பெரும்பாலும் கிராமங்களிலும் நகர பெண்களுமே இப்புரோகிதர்களிடம் ஏமாறி வருகின்றனர்.குறுகிய காலத்தில் பணத்தை பண்மடங்காக பெருக்க விரும்பி தனியார் நிதிநிறுவனங்களில் முதலிடு செய்தும் ஏமாறி வருகின்றனர்.இவ்விசயத்தில் நகரவாசிகள் அதிகம் ஏமாறி வருகின்றனர்.
அடுத்ததாக அனைவரும் ஏமாறுவது அரசியல்வாதிகளிடம் தான்.அரசியல்வாதிகளின் ஏமாற்றம் மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாக விட்டது.ஏனெனில் ஆட்சியாளர்கள் எந்த தவறு செய்தாலும் ஒருமுறை எதிர்கட்சியாக்கினாலும் ஞாபகமறதியால் மீண்டும் ஆளூம் கட்சியாக மாற்றிவிடுக்கின்றோமே.அதனால் தான் இவர்கள் ஆட்சியை பிடிக்க நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவரும் இல்லை என கூறுவதோடு எவருடனும் கூட்டணி வைத்துவிட்டு பின்பு என்னால் தான் வெற்றி என அவரவர் புலம்புக்கின்றனர்.ஆட்சியில் இல்லாத வரை தொழிலாளர் நலன் பற்றி பேசிடும் அரசியல்வாதிகள் ஆட்சியில் அமர்த்திய பின்பு தொழிலாளர் நலனுக்கு எதிரான முடிவுகளாக எடுத்துவருகின்றனர். எனவே இந்நாளில் அரசியல்வாதிகளின் ஏமாற்றிலிருந்து மக்களை காக்க உறுதியேற்போம்.கல்வியில் கவனமாக இல்லாத மாணவர்கள் தனது பெற்றோரையும்,ஆசிரியர்களையும் முட்டாள்களாக முயற்சித்து பின்னாளில் தாங்களே முட்டாள்கள் என பெயரெடுக்கின்றனர்.எனவே இந்நாளில் நாம் பிறரால் ஏமாற்ற படாமலும் நாம் பிறரை ஏமாற்றி பிளைக்காமல் இருக்க சபதமேற்போம்.                                                           .ஷாஜஹான்

கருத்துகள் இல்லை: