வியாழன், 7 ஜூன், 2012

ஐஸ் ஐஸ் பேபி


கோடை வெயில் சுட்டெரிக்கும் நாட்களில் இளநீர்,நுங்கு,சர்பத் மற்றும் குளிர்பானகூடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து தங்களது உடல்வெப்பத்தினை குறைத்து வருவதினை கண்டுவருகின்றோம்.அதே போன்று மதுபான பிரியர்கள் தங்களது உடலின் உஷ்ணத்தினை குறைக்கும் பொருட்டு பீர் சாப்பிடுவதினால் கோடைகாலத்தில் பீர் விற்பனை அதிகரிக்கும் தற்பொழுது அதிகரித்துள்ளது.
பீரின் நன்மைகள்:

நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் என்ற கணக்கில் மிதமாக பீர் அருந்தி வந்தால்,அது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வராமல் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் குடி பழக்கம் உள்ள சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இத்தாலியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, வெவ்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.இந்த ஆய்வில் மிதமாக பீர் மட்டும் அருந்தி வருபவர்களுக்கு,மிதமான அளவில் ஒயின் அருந்துபவர்களை காட்டிலும்,இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 31 விழுக்காடு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.



 பீர் ஏன் உடலுக்கு நல்லது என்பதை பற்றி கூறும் பிரபல இருதயவியல் நிபுணர்         ஹஷ்முக் ரவத்,  "கொழுப்பு மற்றும் நார் சத்து அற்ற பீரில் சிறிது புரத சத்து உள்ளது.கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.இவை ரத்தத்தில் உள்ள 'ஹோமோசைஸ்டீன்' அளவை குறைக்கும் வல்லமை படைத்தவை.ரத்தத்தில் 'ஹோமோசைஸ்டீன்' அளவு அதிகரிப்பதுதான் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இருதய நோய்களுக்கு வித்திடுகிறது"என்கிறார். மேலும் பீரில் இயற்கையிலேயே 'ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்' உள்ளதால், அவை உடலில் செல்களை புதுப்பிக்க வெகுவாக உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருந்த போதும் அளவுக்கு அதிகமாக பருகினால் உடல் நல கேடு ஏற்படும்.
அளவிற்கு  மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
டாஸ்மாக்
நிர்வாக அறிவிப்பு:

தமிழ்நாட்டில் 7434 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் 500 கடைகள் இருக்கின்றன. முதல்கட்டமாக 2,500 ரெப்ரிஜிரேட்டர்களை டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள 500 கடைகளுக்கும் மற்ற மாவட்டங்களில் அதிக மதுபானம் விற்பனையாகும் 2 ஆயிரம் கடைகளுக்கும் இந்த ரெப்ரிஜிரேட்டர்கள் வழங்கப்படும். வோல்டாஸ் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கபட்டுள்ளது.

வேண்டுகோள்:
இந்த அறிவிப்பை பார்த்த நமது வாடிக்கையாளர்கள் நம்மிடம் தற்பொழுதும் பீர் குளுமையாக தானே தருகின்றீர்கள்.எப்படி என வினா எழுப்புகின்றனர்.2003 ல் டாஸ்மாக் அரசு ஏற்று நடத்துவது முதல் இன்று வரை எந்த கடைகளுக்கும் ரெப்ரிஜிரேட்டர் வழங்கவில்லை.கடையில் அரசின் பொருளாக கல்லாவும், அலாரமும்,ஊழியர்கள் நாங்களும் மட்டுமே உள்ளோம்.மற்ற அனைத்தும் பார் மற்றும் இட உரிமையாளர்களுக்கு சொந்தமானது ஆகும்.இதைக்கொண்டு தான் விற்பனையை ஆறு மடங்காக உயர்த்தியுள்ளோம்.ஊதியமோ ஒரு மடங்கு கூட உயரவில்லை.எனவே தான் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலை நோக்கி செல்ல வேண்டியுள்ளது.எனவே அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் கடைகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமாய் டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.


கருத்துகள் இல்லை: