ஞாயிறு, 24 ஜூன், 2012

உலகின் சிறந்த படுக்கை

பால்டசினோ சுப்ரீம் இது உலகின் அதிக மதிப்புடைய கட்டில்களில் ஒன்று.இந்த கட்டில் அமெரிக்கா மற்றும் இத்தாலி நாட்டு உள்கட்டமைப்பு பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது.இந்த உயர்ரக கட்டில் ஆனது 107 கிலோ எடையும் தங்கத்தாலும்.தங்க இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.உயர்ரக ஆஷ் மரங்களை கொண்டும், இதன் திரைசீலைகள் இத்தாலிய பட்டினை கொண்டு தயாரிக்கப்பட்டது. மற்றும் தீ யினால் எரிக்கப்பட முடியாத சான்றிதழ் பெற்றவையாகும்.இதன் மேல்புற பலகையில் வைரமும் உயர்ரக கற்களும் பொருத்தப்பட்டுள்ளன.இதன் விலை  £ 4,000,000.00.
இது நமது டாஸ்மாக் கடைகளின் வாசலில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சி.இவருக்கு மேலேயுள்ள கட்டிலிலும் தேவையில்லாமல் நிம்மதியாக உறங்கவைக்கும் நமது டாஸ்மாக் பணியாளர்கள் பணி சேர்ந்து 10 ஆண்டுகளை நெருங்கியும் பணிநிரந்தம்,பணிபாதுகாப்பு இன்றி தூக்கம் கெட்டு, வாழ்வும் கெட்டுவருவது என்று இந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கும்,ஆளும் அரசாங்கத்திற்கும் என்று தெரிய போகின்றதோ கடவுளுக்கு தான் வெளிச்சம்.
அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் கூட இவரை போன்றே உறங்குகின்றன.
.ஷாஜஹான்,திருமங்கலம். மதுரை.9942522470

கருத்துகள் இல்லை: