வெள்ளி, 19 அக்டோபர், 2012

அரசு மதுவுக்கு இல்லை மறுப்பு .




அரசு மதுவுக்கு இல்லை மறுப்பு .


                                                                               உச்சநீதிமன்றம்.


சென்னையைச் சேர்ந்த, "டிராபிக்' ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசே, "டாஸ்மாக்' என்ற பெயரில், மதுபான கடைகளைத் திறந்து, பொதுமக்களுக்கு, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகர், ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் ராஜா ராமன் ஆஜராகினர்.




மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தின், பிரிவு 47ல்,


மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், சுகாதாரத்தை பேணி காக்கவும், அனை வருக்கும் சத்தான உணவு கிடைக்கவும் அரசு பாடுபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, உயிருக்கு கேடு விளைவிக்கும் மதுபானங்களை மருத்துவ காரணத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பூரண மதுவிலக்கை அரசு கடைபிடிக்க வேண்டும். அதனால், அரசே மதுபானம் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் மேற்கோள் காட்டி கூறப்பட்டது.


 மனுவை விசாரித்த நீதிபதிகள் "டிராபிக்' ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கு, தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசின் கொள்கைக்கு எதிராக, பொதுமக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் விதத்தில், அரசே, கடையைத் திறந்து, மதுபானம் விற்கிறது என்பது மனுதாரரின் வாதம்.அரசின் கொள்கை படி, நாம் சென்றால், அரசு ஊழியர்கள் ஒருவர் கூட, மதுபானம் அருந்தக் கூடாது. அவ்வாறு செய்ய முடியுமா? அந்த விதிமுறைகள், பின்பற்ற வேண்டியவற்றைக் கூறுகின்றன; மது விலக்கு பற்றி கூறவில்லை.

அரசு ஊழியர்கள் யாரும் மதுபானம் அருந்தக் கூடாது என்ற விதியை, நடைமுறை படுத்த முடியுமா? அவ்வாறு செய்தால், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படத் தான் முடியுமா? ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.மதுபானம் அருந்துவதால், ஏராளமானோர் இறப்பதாக, மனுதாரர் கூறுகிறார். அதை விட, தினமும், சாலைகளில் நடக்கும் விபத்துகளில் ஏராளமானோர் இறக்கின்றனர். அவர்கள் மீது மனுதாரர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

நமது உரை.

மது வருமானம் மக்களுக்கே மற்றவர்களுக்கில்லை. உண்மையில் பெரியவர்  "டிராபிக்' ராமசாமி மற்றும் என்னை போன்றோர் விரும்பும் மதுவிலக்கு கொள்கை இனி உலகத்தில் எந்தபகுதியிலும் நடைமுறை சாத்தியமில்லை.மதுவிலக்கு என்பது நமது எம்.ஜி.ஆராலேயே முடியாத விசயம். .இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குஜராத் தவிர எந்தமாநிலங்களிலும் மதுவிலக்கு இல்லை. குஜராத்திலும் பெயரளவில் தான் மதுவிலக்கு.குஜராத்தில் எங்கெல்லாம் சிறப்புபொருளாதார மண்டலங்கள் இயங்கிவருக்கின்றனவோ அங்கு மதுவிலக்கு இல்லை. இவ்வாறு மது இல்லா உலகம் இல்லை என்பது உண்மை நிலை. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு யார் ஆட்சியில் இருந்தாலும் தி.மு. வினர் சிண்டிகேட் பேசி மதுக்கடைகளை எடுத்து நடத்தி அரசுக்கு பெறும் நஷ்டத்தினை ஏற்படுத்திவந்தனர்.இதற்கு இன்றைய முதல்வர் அம்மா அவர்கள் முடிவுக்கட்டி அரசே மதுக்கடைகளை நடத்துவது என்றுமுடிவு செய்து இன்று அமுதசுரபியாக டாஸ்மாக் செயல்படுவது  புள்ளிவிபரகணக்கின் படி அனைவரும் அறிந்ததே. இந்த கொள்கையை மற்ற மாநிலங்கள் கடைபிடித்தால் இந்தியாவிற்கு நன்மையே.மற்றபடி பெரியவரின் ஐடியா நன்று.மதுவிலக்கு நடைமுறை சாத்தியமில்லாத பொழுது அதை அரசு எடுத்து நடத்துவதே சரி.

.ஷாஜஹான்,
9942522470.

கருத்துகள் இல்லை: