சனி, 22 டிசம்பர், 2012

பார் பயங்கரம்


பார் பயங்கரம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் துவங்கி பத்தாவது ஆண்டினை நெருங்கிவரும் நிலையில் விற்பனையில் டாஸ்மாக்கடைகள் வசூல்சாதனைகள் படைத்துவருவதுபோன்று டாஸ்மாக் பார்கள் குற்றநடவடிக்கைகளில் சாதனைபடைத்து வருகின்றன.சமீபகாலமாக பார்கள் அனைத்தும் அழுக்கடைந்த,சுகாதாரமற்ற நோய்களை உற்பத்திசெய்யும் மையங்களாக மட்டுமின்றி திருட்டு மற்றும் கொலைகளத்திற்கான திட்டம்தீட்டும் இடமாகமட்டுமின்றி குற்றநடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் இடமாகவும் அமைந்துள்ளது.டாஸ்மாக் பார்களில் தொடர்ந்து கொலைகளும் கொள்ளைகளும் அரசியல் குண்டர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.


“பார்களில் நடக்கும் இந்த குற்றநடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரிடம் கேட்கும்பொழுது ஒவ்வொரு பார்களும் அந்த பகுதி அரசியல்வாதிகளின் கையில் இருப்பதால் தான் பெருமளவில் கொலை கொள்ளைகள் நடைபெறுகின்றன என கூறுகின்றனர்." நன்றி tlmes of india டிசம்பர்2,2012.




இந்த இரண்டுகட்சிகளின் ஆட்சியிலும் டாஸ்மாக் பார்களானது தங்களது கட்சியினரின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.பார்களின் ஏலம் அரசுஅதிகாரிகளால் நடத்தப்படுவதாக காட்டினாலும் உண்மையில் ஆளும்கட்சியினரின்   மாவட்ட செயலாளர்களாலேயே சிண்டிகேட் அடிப்படையில் நடைபெறுகின்றது.தற்பொழுது சென்ற ஆட்சிக் காலத்தில் பார் ஏலத்தில் பல கோடிஊழல் நடந்ததாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.உண்மைதான் அது இன்றும் ஆளும்கட்சியினரால் தொடரப்பட்டு வருகின்றன. இதில் அரசிற்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுத்துவதுடன் அரசியல்வாதிகள் பார்களை மட்டுமின்றி கடைஊழியர்களிடமும் தங்களின் அரசியல்செல்வாக்கினை பயன்படுத்தி இலவசமாக குடித்து அரசியல்குண்டர்களாக  வளம்வருவதோடு பதவிபோட்டியில் அரசியல்படுகொலைகளை செய்துவருகின்றன.இதற்கான திட்டமிடும் இடமாக பார்களை பயன்படுத்திவருகின்றன.கடந்த 27 நவம்பர்2012 அன்று சென்னை வேலச்சேரியில் உள்ள டாஸ்மாக் பாரில் பார் ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் திமுக மற்றும் அதிமுக அரசியல்குண்டர்களின் மோதலில் குடிக்கவந்தஅப்பாவி மென்பொருள் பொறியாளர் சந்திரசேகர் (வயது 45) கொலை செய்யப்பட்டார்.இது போன்ற நிகழ்வுகள் சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறுகின்றன. இச்செயல்களை ஆளும்கட்சியை சேர்ந்தவர்களினால் நடத்தப்படுவதால் கொலை போன்ற பெரும்குற்றம் நடைபெற்றால் மட்டுமே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.குடிக்க வந்த அப்பாவிகள் தாக்கப்படுவது, கோஷ்டி மோதல் போன்ற நிகழ்வுகள் பார்களின் அன்றாட நிகழ்ச்சியாக மாறிவருகின்றன.இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் பார்களில் மதுஅருந்த பயப்படுகின்றனர். மேலும் மாத துவக்கத்தில் சம்பளபணத்துடன் குடிக்கவரும் மதுப்பிரியர்களை அரசியல் குணடர்கள் தங்களின் அடியாட்களைக் கொண்டு அதிகம் குடிக்க செய்து பணம் பரித்துவருகின்றன.
கீழ்கண்ட நிகழ்வுகள் சென்னையில் மட்டும் கடந்த 4ஆண்டுகளில் நடைபெற்ற குற்றசெயல்களில் முக்கியமானவைகளின் தொகுப்பு.
சென்னை பார் பயங்கரசம்பவங்கள்:
   
மே 2009.
                       சென்னை அண்ணாநகர் டாஸ்மாக் பார் அருகே ஒரு கும்பல்                       ரமேஷ் என்பவரை கொலை செய்தது.
ஜூன்2009.
                    சென்னை திருவெற்றியூர் டாஸ்மாக் பார் அருகே ஒரு கும்பல்                          விநாயகம் என்பவரை கொலை செய்தது.
செப்டம்பர்2010.
              சென்னை ஜீ.எஸ்.டீ ரோடு டாஸ்மாக்பாரினில்     கலவரம்    ஐந்து பேர்  கைது.
செப்டம்பர்2010.
               சென்னை கோட்டூர்புரம் டாஸ்மாக் பாரினில் இரண்டுகும்பல் மோதல்.
பிப்ரவரி 2011.
               சென்னை திருவெற்றியூர் டாஸ்மாக் பார் அருகே அடையாளம் தெரியாதவர் பிணம்.
மே2012.
              சென்னை எக்மோர் டாஸ்மாக் பாரில் அதிமுக தொண்டர் மீது தாக்குதல்.
அக்டோபர்2012.
             சென்னை எக்மோர் டாஸ்மாக் பாரினில் கும்பல் தாக்குதல்
நவம்பர்2012.
            சென்னை வேலச்சேரி டாஸ்மாக் பாரினில் மென்பொருள்                              பொறியாளர் சந்திரசேகர் குல்கர்னி கொலை
தமிழகம் ழுழுமைக்கான டாஸ்மாக் பார்களின் குற்றசெயல்களை எழுத நினைத்தால் பக்கங்கள் கொள்ளாது.

தற்பொழுது டாஸ்மாக் கடைகளில் விற்பனைச்சரிவு என்றசெய்திக்கான காரணிகளில் இந்த சம்பவங்களும் ஒன்றாகும்.டாஸ்மாக் பார்கள் ஆளும் அரசியல்கட்சியினர் பணம் சம்பாதிக்கும் இடம் என்பதிலிருந்து மாற்றி பார்களை அரசே ஏற்று நடத்தினால் அரசிற்கான டாஸ்மாக் வருமானம் அதிகரித்து அரசுநலத்திட்டங்களுக்கு பயன்படும்.இதை அரசிற்கு யார் உணர்த்துவார்கள்?

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.

3 கருத்துகள்:

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

'ஆல்கஹால்' என்பது ஒரு போதைப் பொருளா ?

ஆம். சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு 'நோயே' !

1. பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...

2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்...

3. விஷேசத் தினங்களில் தங்களின் மகிழ்ச்சியை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்...

4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...

5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...

6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...

7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...

8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...

9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...

10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...

11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் '420' களும்...

12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

என்னதான் பாதிப்புகள் ?

1. ஞாபக மறதி

2. உடல் உறுப்புகள் பாதிப்பு

3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்

4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்

5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்

6. தற்கொலை முயற்சி செய்தல்.

7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில் சந்தேகித்தல்

8. குழந்தையின்மை

9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.

10. இறுதியில் அகால மரணம்

'குடி' நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

என்னதான் தீர்வு ?

1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.

2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.

3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.

5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு 'கவுன்சிலிங்' செய்வதன் மூலம் குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான 'ஜூன் 26' அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

7. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் 'பூரண மதுவிலக்கு சட்டத்தை' இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

சேக்கனா M. நிஜாம்

Indian சொன்னது…

" பார்களை அரசே ஏற்று நடத்தினால் அரசிற்கான டாஸ்மாக் வருமானம் அதிகரித்து அரசுநலத்திட்டங்களுக்கு பயன்படும்.இதை அரசிற்கு யார் உணர்த்துவார்கள்?"......... Are you serious?. Can't understand that this liquor sale is demolishing our society?. You should've called for abolition of sale.