ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆட்கொல்லி மேல்நாட்டு சரக்குகள்!


- -  - - - - - - - - - -

குடிமகன்களின் மேலான கவனத்துக்கு...!

- -  - - - - - - - - - -


பொழுதுபோக்குக்கு குடிப்பவர்கள், பொழுதெல்லாம் குடிப்பவர்கள்... வாராந்திரப் பார்ட்டிகளில் ‘ஜஸ்ட்’ கம்பெனி கொடுப்பவர்கள்... இதில் நீங்கள் எந்த  வகையறாவாக இருந்தாலும் சரி; ஐந்து நிமிடம் ஒதுக்கி இதை படிப்பது உங்கள் உடல் / மனநலத்துக்கு மிகவும் உகந்த விஷயம். காசையும் கொட்டி,  கபால மோட்சமும் அடைந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணமே இந்தக்கட்டுரை உருவாக்கத்துக்கான நோக்கம். கண்டதையும் குடித்து, கண்ணீர் அஞ் சலி போஸ்டர்களாக மாறிய கோடானுகோடி குடிமகன்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!


மது என்பது டாஸ்மாக் நிர்வாகத்தின் தனிப்பட்ட கண்டுபிடிப்பு அல்ல. பூமியின் மிகத் தொன்மையான வஸ்துகளில் அதுவும் ஒன்று. முறையாக அதை  பயன்படுத்தினால், மூளையை சுறுசுறுப்பாக்கலாம். உடல் சோர்வுக்கு விடைகொடுக்கலாம். சுருங்கச் சொல்லின், மது என்பது குடிக்க மட்டுமே; குளிக்க  அல்ல. மட்டமான சரக்கில் தீர்த்தமாடி விட்டு, மறுநாள் காலையில் நெஞ்சு எரிகிறதே; வயிற்றைப் பிசைகிறதே என்று புலம்புவது நல்ல குடிமகனுக்கு  அழகல்ல. போதை என்கிற பெயரில் ஆளைப் பதம் பார்க்கிற ஆபத்தான சரக்குகள் உலகமெங்கும் தடைகளையும் கடந்து, ரகசியமாக புழங்கிக்  கொண்டுதான் இருக்கின்றன. நம்மூரில் பல்லி, பாச்சான் எல்லாம் போட்டு தயாராகிற கள்ளச்சாராயம் போல, உலகக் குடிமகன்களின் உள்ளம் கவர்ந்த  ‘டேஞ்சர் சரக்கு’களின் பட்டியல் இங்கே உங்கள் பார்வைக்கு:




1) அப்சின்த்: ‘டேஞ்சர்’ சரக்கு வரிசையில் நம்பர் 1 இதுதான். ‘நாக்கில பட்டதும், நல்ல பாம்பு கடிச்சது போல சும்மா நச்சுனு ஏறுதுப்பா....’ என்று ஒரு  காலத்தில் உலகம் முழுவதும் சப்புக் கொட்டிக் கொண்டு குடித்த ஐட்டம் இது. உண்மையிலேயே, நல்லபாம்பு விஷம் அளவுக்கு இது டேஞ்சர் என மரு த்துவ மகா முனிகள் தலையாய் அடித்தும் பயனில்லை. எட்டிக்காய் போன்ற ஒரு வகை கசப்பான காய், பெருஞ்சீரகம் (சோம்பு) போன்றவற்றை கலந்து  கட்டி புது பார்முலாவில் தயாரிக்கப்பட்ட இந்தச் சரக்கு உலகின் அதி பயங்கர போதையாக கருதப்பட்டது. அது மட்டும் என்றால் பரவாயில்லை. இதை  பருகிய குடிமகன்கள் பலரும் வலிப்பு, காசநோய் போன்ற எக்கச்சக்க பின்விளைவுகளில் திண்டாடினர். விளைவு...? 19ம் நூற்றாண்டிலேயே இதற்கு தடை  விதிக்கப்பட்டது. ஆனாலும், தற்போது மீண்டும் இது ‘கை சரக்காக’ புழங்கத் துவங்கியிருக்கிறது என்பது குடிமகன்களுக்கான உஷார் தகவல்.


2) மெஸ்கால்:
மெக்சிகோ பகுதியில் தென்படுகிற ஒரு வித காட்டுக் கற்றாழைச் செடிகளில் இருந்து, ஆவியாக்கி குளிர வைத்து திரவமாக்குகிற விதத்தில்  தயாரிக்கப்படுகிற பானம் இது. கல்யாணமோ; காது குத்தோ... 1940ம் ஆண்டுகளில் வெளிநாட்டு குடிமகன்களுக்கு இது இல்லாமல் ‘நல்லது, கெட்டது’  இல்லை. ‘கஸ்டமர்’களை கவரும் நோக்கத்தில், கற்றாழைச் செடிகளில் வாசம் செய்கிற புழுவையும் பதப்படுத்தி, பக்குவப்படுத்தி சரக்குக்குள் மிதக்க  விட்டு ‘சர்வ்’ செய்வது, இதன் ஸ்பெஷாலிட்டி.


3) ஸ்கார்ப்பியன் வோட்கா:
 ரஷ்யா மீது இன்றைக்கும் நம்மவர்களுக்கு ஒரு அலாதி மரியாதை இருப்பதற்கு, அந்த நாட்டின் பிரத்யேக தயாரிப்பான  வோட்காவும் ஒரு முக்கியக் காரணமாக நிச்சயம் இருக்கலாம். சாதாரணமாக, நம்மூர் கடைகளில் கிடைக்கிற வோட்காவையே, அளவுக்கதிகமாக பயன்ப டுத்தினால், வேண்டாத சில வில்லங்கங்கள் வரும் என ‘கரை கண்ட’ சில குடிமகன்கள் எச்சரிப்பதை பார்களில் கேட்டிருக்கலாம். இந்த ஸ்கார்ப்பியன்  வோட்கா பற்றி கேட்கவே வேண்டாம். பெயருக்கு ஏற்றார் போல, உள்ளேயே கொடுக்கு கூட அகற்றப்படாமல் ஒரு தேள் மிதக்கும். குடித்தால், பலான  மேட்டரில் புகுந்து விளையாடலாம் என்றும், வேறு சில உடல் உபாதைகளுக்கு கண்கண்ட மருந்து என்று போகிற போக்கில் யாரோ திரி கொளுத்தி வி ட்டுப் போக, இதைக் குடித்து உடல்நலம் கெட்டவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம்.


4) த்ரி லைஸார்ட் லிக்கர்:
 பெயரைப் பார்த்ததும் தெரியவேண்டாம்? லைஸார்ட் லிக்கர் எனப்படுகிற இந்த ‘பல்லி பானம்’ சீனா மற்றும் வியட்நாமில்  பிரபலம். பல்லிகளை (வேதியியல் மாற்றங்கள் செய்து) மிதக்க விட்டு தருகிற இந்த பானத்தை பருகினால், உடம்புக்கு அப்படி ஒரு சக்தி கிடைக்குமாம்.  ‘சும்மா, ஒரு பெக் போட்டுட்டு போ மாமேய்’ என்று சீனா பக்கம் போனால் கூப்பிடுவார்கள். உஷாரேய்!


5) ஸ்னேக் ஒய்ன்: பல்லி வந்து விட்டது. அடுத்து பாம்புதானே? அதேதான். கொடூர விஷமுள்ள பாம்பை ஊறப் போட்டு தயாரிக்கிற பானம் இது. பாம்பு  இறைச்சி மற்றும் அதன் விஷம் கலந்து, அலாதியான ஒரு சுவையை இந்த ஒய்னுக்குக் கொடுக்கிறதாம். இதில் கலந்திருக்கிற எத்தனால், பாம்பு விஷத் தை முறித்து விடுவதால், குடிமகன்கள் தப்பிப் பிழைக்கிறார்கள். மருத்துவப் பயன்பாட்டுக்கு என்று இருந்தது, நாளடைவில், ‘மட்டையாகிற’ பயன்பாட் டுக்கு மாறி விட்டது. இதுவும் மேட் இன் வியட்நாம் என்பது குறிப்பிடத்தக்கது.


6) பேபி மைஸ் ஒய்ன்:
 எலித்தொல்லை தாங்கலை என்று சலித்துக் கொள்கிறவரா நீங்கள்? எலிகளை பயனுள்ள ஒரு ஜந்துவாக்க ஆசையா?  அப்படியானால், இருக்கவே இருக்கிறது குட்டி எலி ஒய்ன். நல்ல பிராண்ட் ஒய்ன் வாங்கிக் கொள்ளுங்கள். உயிருடன் சில எலிக்குஞ்சுகளைப் பிடித்து,  அதற்குள் போட்டு, ஜாடியை இறுக்க மூடி வையுங்கள். ஊற்றியிருக்கிற ஒய்ன், எலிக்குஞ்சுகளின் உடல் உறுப்புகளில் நன்றாக பரவவேண்டும். பின்னர்,  நாள் கணக்கில் அதை நொதிக்க வைத்து, கொஞ்சம் ரசாயனக் கலவைகளும் கலந்து, வடித்து இறக்கினால்... பேபி மைஸ் ஒய்ன் ரெடி! இது சீன  பிராண்ட். சில மருத்துவப் பயன்பாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். அதையும் தாண்டி, போதை பிரமாதம் என, அந்த ஊர் ‘போதை தர்மன்’கள், அப்ள £ஸ் போடுகிறார்கள்.


7) சீகல் ஒய்ன்:
ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்கிற எஸ்கிமோக்கள், கிடுகிடுக்க வைக்கிற அந்த படு பயங்கர பனி குளிரை சமாளிப்பதற்காக, இந்த  சரக்கிடம்தான் சரணடைகிறார்கள். சீகல் எனப்படுகிற கடல் பறவையை பிடித்து துண்டங்கள் போட்டு, தண்ணீரில் (அல்லது, ஒய்னில்) ஊறப்போட்டு, கு றிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு எடுத்து, ஒரு கட்டுக் கட்டினால்... பனியெல்லாம் பஞ்சாக பறக்குமாம்.


- படித்தீர்களா...? பல்லி, பாம்பு சரக்குகளை பருகுகிற மேல்நாட்டு குடிமகன்களோடு ஒப்பிடுகையில், நம்ம ஊர் கள்ளச்சாராயம் எவ்வளவோ பெட்டர் எ ன்ற முடிவுக்கு வந்து விடவேண்டாம். போதை என்பது, மனதின் இறுக்கத்தை தளர்வாக்குவதற்குத்தானே தவிர, ‘காலமானார்’ நிலைமைக்கு வர  வைப்பதற்கு அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். மது பிரியர்கள் தங்களது உரிமையாக கரும்பின் சக்கை  கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் டாஸ்மாக் சரக்குகளை தானியங்களிலிருந்து தயாரித்து வழங்க அரசிடம் வேண்டலாம்.

குடிப்பழக்கம் உடலுக்கும், மனதுக்கும் மட்டுமல்ல... நமது குடும்ப நலனுக்கும் தீங்கானது.  அதையும் மீறி... அத்தியாவசியப்படுகிற நேரத்தில், தரமான சரக்கையே தேர்ந்தெடுத்து, உடல்நலம் பேணுங்கள்!



டாஸ்மாக் செய்திசேகரிப்புக்குழு


1 கருத்து:

ச.மே.இளஞ்செழியன் சொன்னது…

குடிப்பவர்களுக்கு பயனுள்ள ஒரு பாதுகாப்பு கட்டுரை.

கட்டுரையின் இறுதி வரிகள் தான் சபாஷ்...

இதுவேரையா?????? நல்லாருக்கு போங்க...

மது பிரியர்கள் தங்களது உரிமையாக கரும்பின் சக்கை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் டாஸ்மாக் சரக்குகளை தானியங்களிலிருந்து தயாரித்து வழங்க அரசிடம் வேண்டலாம்.

அதவிட இந்த கடைசி போதனை இருக்கே...

இன்றைய சூழலில் மதுவிலக்கு ஏற்படுட்டுவிடுமோ என்ற ஒருவித பய மன எண்ண அலையிலிருந்து விடுபட்டு பறக்க செய்கிறது....நன்றி..

அந்த கடைசி போதனை இதுதான்...

குடிப்பழக்கம் உடலுக்கும், மனதுக்கும் மட்டுமல்ல... நமது குடும்ப நலனுக்கும் தீங்கானது.

அதையும் மீறி... அட அட அட அத்தியாவசியப்படுகிற நேரத்தில், தரமான சரக்கையே தேர்ந்தெடுத்து, உடல்நலம் பேணுங்கள்! சூப்பரப்பூ...