ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

மாமே ஹேங் - ஓவரா...?



தண்ணீரில் மிதக்கும் மீன்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதில்லை - இது இயற்கையின் நியதி. எப்போதும் ‘தண்ணீரில்' மிதக்கும் குடிகார கும்கிகளை, ‘ஹேங்-ஓவர்' போன்ற இம்சைகள் எட்டியும் பார்ப்பதில்லை. மாதத்துக்கு ஒரு நாள், ‘நல்லது; கெட்டது'க்கு நாக்கை நனைக்கிறவர்கள் நிலைமைதான் பரிதாபம். வயிற்று வலி, தலைவலி என்று மறுநாள் காலையில், மண்டகப்படி காத்திருக்கும்.


முதல் நாள் இரவு, முங்கி எழுந்து விட்டு, மறுநாள் காலையில் தலையைப் பிடித்த படி, ஒரு வேலையும் ஓடாமல், ‘பாம்' (வலி நிவாரணிதான்!) தடவிக் கொண்டு உட்காருகிற அவஸ்தையை, ஆங்கிலத்தில் ‘ஹேங்-ஓவர்' என்கிறார்கள். இந்த ‘ஹேங்-ஓவர்' தாக்கினால், எலுமிச்சை ஜூஸ் குடி, வெற்றிலை பாக்கு போடு என்றெல்லாம் ‘கரை கண்டவர்கள்' பாட்டி வைத்தியம் சொல்கிறார்களா?



அதெல்லாம் மறந்திடுங்க! பிரச்னை மேலும் பெரிதாகி விடும். ‘ஹேங்-ஓவர்' வந்தால் அதை சமாளிக்க, குடிகாரர்கள் சங்கம் சிபாரிசு செய்கிற பல விஷயங்கள் பாதகத்தில்தான் முடிந்திருக்கிறது. தலைவலி தீர என்ன செய்யவேண்டும் / கூடாது என்று டாஸ்மாக் வலைப்பூ வழங்கும் பட்டியல் இங்கே... படித்து பரப்பி பயன் பெறுங்கள் எனதருமை குடிமக்களே….


இன்னும் கொஞ்சம் ஊத்து!


இரவெல்லாம் மொடா குடி காலையில் எழுந்தவுடன் தலைவலியா? சக குடி நண்பனின் ‘தலைவலி தாங்கலையா மாமு? இன்னும் ஒரு ரவுண்டு இறக்கு. சும்மா பிச்சுகிட்டு பறந்திடும்' என்று எந்த சீனியர் ‘புட்டி'சனாவது ஐடியா கொடுத்தால், இடத்தை காலி செய்து விடுங்கள். இது ஹைதர் காலத்திலிருந்தே சொல்லும் பழங்கதை தான், நம்ம சினிமா சிரிப்பு நடிகர் விவேக் உள்பட, ஆனால் உண்மையில்லை. ஏற்கனவே பிரச்னை இருக்கையில், மேலும் ஆல்கஹால் என்பது, நிலைமையை இன்னும் சிக்கலாக்கவே செய்யும். அதற்குப் பதில், லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால், நிலைமை கொஞ்சம் சீராகும். நன்கு கவனம் டாஸ்மாக் தண்ணீ இல்லை. குடிநீர் தான் மாமே!


மருந்துக்கும் மாத்திரை?


டாஸ்மாக் ‘மருந்து' சாப்பிடுவதால் ஏற்படும் தலைவலியை மாத்திரை போட்டு    “இட்ஸ் கான்,போயிந்தே,போயே போச்சுஎன்ற பாணியில்  சரி செய்து விடமுடியாது. நம்ம பயலுக சும்மாவே ஐடியா மணி இதில் நம்ம டாஸ்மாக் சரக்கு உள்ள போனா ஐடியா புலி யாகி மருந்து க்கு  மாறு மாமே என தலைவலி மாத்திரை, வலி நிவாரணிகளை யாராவது சிபாரிசு செய்தால், வினை தேடி வருகிறது என்று அர்த்தம். அதுவும், ஆஸ்பரின், புரூஃபன் மாத்திரைகள் மிகவும் டேஞ்சர். ஆல்கஹால், ‘உள்ளே' இருக்கும் போது, இந்த மாத்திரைகள் எடுப்பது, கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வயிற்று உபாதையும் வாட்டி எடுக்கும் மாமே!


சூடா ஒரு காபி?


பில்டர் காபியா மாமி? இல்லடா அம்பி ப்ரு டா என்று காபிக்கு இங்கே முக்கியதுவம் கொடுத்தால் இதுவும் தவறான நம்பிக்கையே! காபி குடித்தால், சாதாரண தலைவலி வேண்டுமானால் பறக்கலாம். ‘சரக்கு' தலைவலி பறக்காது. தவிர, ‘ஹேங்-ஓவர்' இருக்கும் போது, காபி சாப்பிடுவதால், ‘உச்சா' ஓவராக இறங்கி, உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிற ஆபத்தும் இருக்கிறது. தாங்கவே முடியாத பட்சத்தில், ஒரே ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டு, நாள் முழுக்க தண்ணீர் (மிக்ஸிங் இன்றி) நிறைய, நிறைய குடிக்கலாம் மாமே!


பச்சை முட்டை ஓகேவா?


‘ஹேங்-ஓவரா? எனக்கும் இருந்துச்சு. பச்சை முட்டையை உடைச்சுக் குடிச்சேன். அவ்வளவுதான். தலைவலி போயே போச்சு..  என்றெல்லாம் யாராவது சொன்னால்... அதற்குப் பெயர் பச்சை கதை. ச்சீ.. பச்சை பொய். பச்சை முட்டை குடித்தால், உமட்டலும், வாந்தியும்தான் வருமே தவிர, தலைவலி போகாது. சாதாரணமாகவே பச்சை முட்டை சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல.உடன் ஆப்பாயில் புல்பாயில் என எண்ணெய் கலப்பட முட்டைக்கும் தடா தான். வேண்டுமானால், அவித்த முட்டை ஓகே. வயிற்றுக்கு நல்லது மாமே!

.


‘பொரித்தது' வேண்டாமே!


‘ஹேங்-ஓவர்' தலைவலி நேரத்தில், பஜ்ஜீ,சொஜ்ஜீ என பொரித்த பண்டங்களை சாப்பிடலாம் என்று யாராவது அழைத்தால், அந்த திசைக்கே கும்பிடு போடுவது பெட்டர். தலைவலி நேரம் மட்டுமல்ல; எண்ணெய் பொரித்த பண்டங்கள் எப்போதுமே நன்மை செய்வதில்லை. இன்றைய குடிமகன் களில் பலர் ஒபிசிட்டீ (உடல்பருமன்) பிரச்சனைகளுக்கும் இதுவே காரணமாகும் மாமே!



ஜிம்முக்கு போகலாமா?


‘ஹேங்-ஓவர்' தலைவலியை விரட்டியடிக்கவும், உடல்நலத்தில் தவறிழைத்து விட்டதாக எண்ணி தாழ்வுமனப்பான்மையில் கடுமையான உடற்பயிற்சி செய்யலாம் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. உடம்பு இன்னும் களைப்பாகுமே தவிர, வேறு பயனில்லை. புருஸ்லீ ,ஜாக்கி ஜான் ஆக மாறமுடியாது. அதற்குப் பதில், ‘ஜில்' காற்றில், காலாற கொஞ்சம் நடந்து திரும்பினால், நிலைமை கொஞ்சம் சீரடையும் மாமே!

.


ஷவரை திறந்து விடுங்க!


பாத்ரூம் ஷவருக்குக் கீழே தவமாய் நின்று விடுங்கள். தலை வழியாக தண்ணீர் அருவியாக கொட்டுவது, ‘ஹேங்-ஓவர்' தலைவலிக்கு ‘குட்-பை' சொல்லும். டாஸ்மாக் பாரில் புரண்டு எழுந்ததால், உடலில் அடிக்கிற ‘கப்பு'ம் விடைபெற்றுக் கொள்ளும் மாமே!

.


‘தண்ணி'யை மறக்காதீங்க!


‘தண்ணி'யால் ஏற்படுகிற தொந்தரவை தண்ணீர் விட்டுத்தான் ஆற்றவேண்டும். ‘ஹேங்-ஓவர்' பிரச்னைக்கு ஆளுக்கு ஒரு தீர்வு சொன்னாலும், ஆயுளுக்கும் மறக்கக்கூடாத விஷயம் தண்ணீர். எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ; அவ்வளவுக்கவ்வளவு நல்லது மாமே!

.


கிளாஸ் எடுத்துக்கோங்க!


‘ஹேங்-ஓவர்' தலைவலியுடன் வெயிலில் அலையவேண்டாம். தவிர்க்க முடியாத பட்சத்தில், கிளாஸ் எடுத்துக்கோங்க! கிளாஸ் என்றவுடன் இன்னும் கொஞ்சம் மோர் என சரக்கில் இறங்கிவிடாமல்  கண்களுக்கு குளிர் கண்ணாடி கட்டாயம் மாமே!

.

கருத்துகள் இல்லை: