ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நடப்பு செய்திகள்


உண்ணாவிரதப் போராட்டம்    டாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில், உண்ணாவிரதப் போராட்டம்    
நடத்தினர்.தமிழகம் முழுவதும், 6,736 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்களை அரசு, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன், உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.தமிழகம் முழுவதுமிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட, டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்றனர். பல்வேறு தொழிற்சங்கத்தினரும், இவர்களது போராட்டத்தை ஆதரித்து பேசினர்.
மகாவீரர் ஜெயந்தியையொட்டி, மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாளில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், ஊழியர்கள், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போரட்டத்தில் கலந்து கொண்ட டாஸ்மாக் பணியாளர்கள்  அனைவருக்கும்  டாஸ்மாக்செய்திகள்   தளம்
நன்றியினை         தெரிவிக்கின்றதுடாஸ்மாக் பணியாளர்கள் 2வது மாநில மாநாடு

பணி நிரந்தரம் வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் 2வது மாநில மாநாடு சென்னையில் 11ம் தேதி நடக்கிறது.டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பழனிபாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை:டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு 2003ம் ஆண்டு தொடங்கியது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். 6,300 கடைகளில் 32 ஆயிரம் பேர் வேலை செய்கிறோம். 9 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகிறோம். சூப்பர்வைசர் ரூ.5 ஆயிரம், விற்பனையாளர் ரூ. 3,600, பார் உதவியாளர் ரூ.2,700 என்று மாத சம்பளம் வாங்கி வருகிறோம். விடுமுறை இல்லாமல் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறோம்.பணி நிரந்தரம், சம்பள உயர்வு, காப்பீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் 11ம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடக்கிறது. அகில இந்திய அரசு பணியாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், தென்னிந்திய ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பேசுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்சட்டசபைஅறிக்கை

 ""டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை,'' என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சவுந்தர ராஜன்(மார்க்சிஸ்ட்) பேசும்போது, "தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில், இவ்வளவு பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பொருத்தமானதல்ல. எனவே, இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்' என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ""டாஸ்மாக் கடைகளில் கட்டாயம் இத்தனை பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு கடையிலும் சராசரியாக எவ்வளவு விற்பனையாகும் என்று கணக்கு உள்ளது. அந்த விற்பனை அளவு குறைந்தால், தவறு நடக்கிறது என்று அர்த்தம். எனவே, அந்த அளவு குறையாமல் விற்பனை செய்ய வேண்டும் என்று மட்டுமே வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம், போலி மதுபாட்டில்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரி செலுத்தாமல் வரும் சரக்குகள், நமது கடைகளுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மற்றபடி, கூடுதலாக விற்பனை செய்து சாதனை படைக்க வேண்டும் என, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை,'' என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் தோழர்.சவுந்தர ராஜன் அவர்களுக்குடாஸ்மாக்செய்திகள் தளம் நன்றியினை தெரிவிக்கின்றது.
.ஷாஜஹான்,திருமங்கலம்

கருத்துகள் இல்லை: