புதன், 11 ஏப்ரல், 2012

யுவா , வா .....


ஃபீனிக்ஸ் எனும் தீயில் சுட்டாலும் சாம்பலிலிருந்து உயிர்பெற்று எழும்பறவை போல் மீண்டும் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று டாஸ்மாக் தளம்  இன்றே  அறிவிக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங், அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஏப்.9 நாடு திரும்பினார். அவரை விமானநிலையத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் தங்கி நுரையீரல் பகுதியில் இருந்த புற்றுநோய்க் கட்டிக்காக சிகிச்சை பெற்று வந்தார் யுவராஜ் சிங். அங்கு மூன்று கட்ட கீமோதெரபி சிகிச்சையை முடித்த அவர், அங்கிருந்து லண்டன் சென்றார். நண்பரின் வீட்டில் தங்கியிருந்த அவர் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று தில்லி திரும்பினார். அவர் எப்போது மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.



யுவராஜ்சிங்கிற்கு தொகை குறிப்பிடாதகாசோலை தர தயார்:

யுவராஜ் சிங் கிரிக்கெட் பயிற்சிக் கூடம் தொடங்க விரும்பினால் அதற்காக தொகை குறிப்பிடாத காசோலை கொடுக்க தயாராக இருப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
அவருக்கு தேவையான உதவிகளை செய்ய பஞ்சாப் மாநில அரசு முன்வந்துள்ளது.இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், யுவராஜ் பஞ்சாப் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சிக்கூடம் தொடங்க விரும்பினால் அதற்காக தொகை குறிப்பிடாத காசோலை கொடுக்க தயாராக உள்ளோம். இதன் மூலம் எங்கள் மாநில இளைஞர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.மேலும், யுவராஜ் சிங்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.
புற்று நோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பியுள்ள யுவராஜ் சிங் விரைவில் அணிக்குத் திரும்புவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைத்தலைவரும், .பி.எல் போட்டிக்குழுத் தலைவருமான ராஜிவ் சுக்லா, யுவராஜ் சிங் விரைவில் அணிக்குத் திரும்புவார் என்று கூறியுள்ளார்.
ராஜிவ் சுக்லா கூறியிருப்பதாவது, யுவராஜ் மிக விரைவாக குணமடைந்து நாடு திரும்பியுள்ளார். அவர் விரைவில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையுள்ளது. முழுமையாக உடல்தகுதி பெற்றவுடன் அணியில் இணைவார்.
யுவராஜ் சிங் கூறுகையில்,
எனக்காக நாட்டு மக்கள் அனைவரும் வேண்டிக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளேன். இதன் மூலம் என்மீது மக்கள் வைத்திருந்த அன்பை தெரிந்து கொண்டேன் நான் நன்றாக இருக்கிறேன் வருகிற புதன் கிழமை நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் மற்ற வியங்களுக்கு பதிலளிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
நம் எதிர்ப்பார்ப்பையும் மீறிய அளவில் அவரது செயல்பாடுகள் இருக்கும் என்று டாஸ்மாக் தளம்  இன்றே  அறிவிக்கின்றது.

யுவா  , வா .....
.ஷாஜஹான். திருமங்கலம்.9942522470.





கருத்துகள் இல்லை: