சனி, 2 ஜூன், 2012

இடைதரகர்களின் இழி நிலை.


இந்திய அரசியலில் இடைதரகர்களின் முகத்திரை கிழிக்கப்பட்ட சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளது.உதாரணமாக சந்திராசாமியார்,நீராநாடியா போன்றோரை நாம் அறிந்து இருப்போம்.தற்பொழுது நமது ராணுவதளபதியின் கூற்றின் படி ராணுவ தளவாடங்களை பெற்றதிலும் பல இடைதரகர்களின் விளையாட்டு தெரியவருகின்றது. நமது இந்தியாவை பொறுத்தமட்டில் எந்த அரசு அலுவலகங்களையும் இந்த இடைதரகர்கள் விட்டுவைப்பதாக இல்லை. தமிழகத்தை பொறுத்தளவில் எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும், எந்த அரசுபணிகளும்  இந்த இடைதரகர்களின் தலையீட்டின்றி நடைபெறுவதில்லை. நகராட்சியா,பத்திரபதிவு அலுவலகமா,வாகனபதிவு அலுவலகமா,பாஸ்போர்ட் அலுவலகமா,காவல்நிலையமா எங்கும் இந்த இடைதரகர்கள் நிரம்பி வழிகின்றனர்.முதலில் மக்கள் ஏன் இந்த இடைதரகர்களை நாடி செல்கின்றனர்.



அரசு அலுவலகர்கள் கையூட்டினை (லஞ்சம்) தங்களால் நேரடியாக வாங்க பயந்தவர்களாக இந்த இடைதரகர்களை பயன்படுத்துகின்றனர்.இந்த இடைதரகர்கள் தங்களுக்கென்று ஒரு கமிஷனை வைத்து அரசு அலுவலர்கள்,ஆளும் மந்திரிகளிடம் பேசி காரியத்தினை எளிதில் முடித்துக்கொடுக்கின்றனர். தற்பொழுது நமது டாஸ்மாக்கில் இடைதரகர்களின் செயல்பாட்டினை காண்போம். புதிய மதுபான கம்பெனிகளுக்கு அனுமதி கொடுப்பதிலிருந்து சரக்குகளை கொள்முதல் செய்வதில்,புதிய தனியார் கிளப் என்றபெயரிலான மதுகூடங்களுக்கு அனுமதி கொடுப்பதில் இந்த இடைதரகர்கள் முறைகேடான முறையில் பங்கு வகிக்கின்றனர்.இதை பற்றி எழுதினால் சில பக்கங்களில் முடிக்க முடியாது. எனவே இந்த இடைதரகர்களை விட்டுவிட்டு நம் டாஸ்மாக் ஊழியர்களிடையே உளவிவரும் நம்முடன் பணிக்கு சேர்ந்து நமக்கிடையே பணியாற்றிக்கொண்டே அதிகாரிகளுக்கு இடைதரகராக செயல்படுபவர்களை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.இந்த இடைதரகர்கள் திருத்துவதற்காக தான் இக்கட்டுரை.அவர்களின் மனதை புண்படுத்த அல்ல.டாஸ்மாக்கில் இந்த இடைதரகர்கள் எப்படி உதித்தார்கள் எனில் 2003 ல் பணிக்கு சேர்ந்த பொழுது அதிகாரிகள் அலுவலகத்திற்கும் கடைகளுக்கும் தொடர்புக்காக பகுதிமேற்பார்வையாளர் என்ற டம்மிபதவியை உருவாக்கி அவர்கள் மூலமாக மாத மாமூல் மற்றும் பணியிட மாற்ற பேரம் பேசி கையூட்டினை பெற்றுவந்தனர்.ஒரு சில பகுதிமேற்பார்வையாளர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள் ஆவர்.இந்த பகுதிமேற்பார்வையாளர் நியமனம் கல்வி தகுதி அடிப்படையிலோ அல்லது கல்வி மூப்பு அடிப்படையிலோ நியமிக்கவில்லை.மாறாக நன்றாக பேரம்பேசுபவர்களை இடைதரகருக்கான தகுதியாக பகுதிமேற்பார்வையாளராக நியமித்தனர்.இவர்கள் பகுதிமேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவுடன் மற்ற மேற்பார்வையாளர்கள் எல்லாம் தகுதியில் குறைந்தவர்களை போன்றும் ஏதோ இவர்கள் மட்டும் மேன்மையானவர்களை போன்று நடந்து அனைத்து டாஸ்மாக் பணியாளர்களிடமும் கெட்ட பெயர் எடுத்தனர்.அதனால் இந்த டம்மி பதவியும் சென்ற ஆட்சியில் பறிக்கப்பட்டது.ஆனால் பணம் சம்பாரித்து பழகிய இந்த புரோக்கர்களால் சும்மா இருக்க முடியுமா? தற்பொழுது புதிய பாலிசியாக யார் ஆளும் கட்சியை சேர்ந்தவரோ அவரே இந்த இடைதரகர் பணியை செய்ய வேண்டும் என்று எழுத படாத விதியாக உள்ளது.புதிய ஆட்சி வந்ததும் ஆளும்கட்சி சங்கத்திற்குள் பிரச்சனை யார் மாமாவாக செயல்படுவது என்பதில் கோஸ்டி சண்டை இது காவல் நிலையம் வரை சில மாவட்டத்தில் சென்றது.ஆனாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இடைதரகராக பணியாற்றும் சிலரும் உள்ளனர்.இவர்கள் தங்களது கடை வேலையை பார்பதற்கு பதில் முதுநிலைமண்டல மேலாளர் அலுவலகத்தையும்,மாவட்ட மேலாளர் அலுவலகத்தையுமே குட்டி போட்ட பூனையை போன்று சுற்றி வருகின்றனர்.இவர்களை நேரில் பார்க்கும் டாஸ்மாக் பணியாளர்கள் பயத்தில் மரியாதை செலுத்துவது போன்று செய்கைகளை செய்தாலும் இவர்கள் சென்றவுடன் இவர்களின் பெயருக்கு முன்னால் "மாமா" என்றே அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.அதுதெரியாத இவர்கள் பணம் சம்பாரிப்பதே குறியாக உள்ளனர்.சமிபத்தில் மதுரையின் மாவட்ட மேலாளர் அவர்கள் விற்பனையாளர் ஆலோசனை கூட்டத்தினை நடத்தினர்.அப்பொழுது ஒரு மேற்பார்வையாளர் மேடைக்கு வந்து பேச முயல அனைத்து விற்பனையாளர்களும்  ஒருங்கினைந்து அந்த இடைதரகனை உடன் மேடையை விட்டு இறங்க உரத்த குரல் கொடுத்து விரட்டி அடித்தனர்.இந்த நிகழ்வு மற்ற இடைதரகர்களுக்கும் ஒரு நல்ல பாடமாகும்.
தீர்வு தான் என்ன?
முன்னாள் முதல்வர் அவர்கள் உலக பணகாராக இருந்தாலும் தனது மகளை ஜெயிலில் அடைத்த பொழுது துடித்ததை பார்த்தப்பின்பு ஒரு பெரியவர் "எத்தனை பேரை இவர் பொய்வழக்கில் உள்ளே தள்ளியிருப்பார் அதன் மறுவினை தான் இந்த தண்டனை"என கூறினார் . இதை கொண்டு இந்த இடைதரகர்கள் பாடம் கற்றுகொள்ள வேண்டும்.பணியாற்றும் காலம் எல்லாம் யாருடைய வாழ்கையையும் கெடுக்கமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். பணத்திற்காக யார் வாழ்கையை நீங்கள் கெடுத்தாலும் உங்களுக்கு சோதனை வந்து தான் தீரும்.திருடனாய் பார்த்து திருடாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.இறுதியாக பணியாளர்களுக்கான வேண்டுகோள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் நமது உடலில் ஏற்படும் காய்ச்சலை போன்றவர்கள் இவர்கள் வருவார்கள் போய் விடுவார்கள் விரட்டிவிடலாம்.ஆனால் இடைதரகர்களோ புற்றுநோயை போன்றவர்கள் இவர்கள் நம்முடனே இருந்து நம்மை அழித்துவிடுவர்.இவர்களை வளர விடக்கூடாது.
.ஷாஜஹான்,திருமங்கலம்.99425 22470.

1 கருத்து:

selvaraj சொன்னது…

நன்றி திரு ஷாஜகான் அவர்களே , இடைதரகர்கள் மதுரை மட்டும் அல்ல தஞ்சை உட்பட அனைத்து மாவட்டத்திலும் பெருகிவிட்டனர், அவர்களை இனம் கண்டு ஒதுக்கவேண்டும்