வியாழன், 19 ஜூலை, 2012

கூடுதல்விலை விற்பனைக்கு யார் காரணம்?

380 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணி இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர். ஏன்?அன்று ஆய்வு செய்த சென்னை மற்றும் கோவை மாவட்ட அனைத்து கடைகளிலும் கூடுதல் விலையே விற்றுள்ளனர்.மற்ற மாவட்டங்களில் ஆய்வு நடைபெறவில்லை நடந்தால் அங்கும் இதே நிலை தான் ஏன் இந்த டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் கூடுதல்விலைக்கு விற்பனை செய்கின்றனர்?

கடந்த பத்துஆண்டுகளுக்கு முன்பு யார் ஆட்சியில் இருந்தாலும் சில அரசியல் வாதிகள் சிண்டிகேட் பேசி மதுக்கடைகளை எடுத்து நடத்தி அரசுக்கு பெறும் நஷ்டத்தினை ஏற்படுத்திவந்தனர்.இதற்கு இன்றைய முதல்வர் அம்மா அவர்கள் முடிவுகட்டி அரசே மதுக்கடைகளை நடத்துவது என்றுமுடிவு செய்து இன்று அமுதசுரபியாக டாஸ்மாக் செயல்படுவது அனைவரும் அறிந்ததே.டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருவாய் 2011-2012ல் ரூ20000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வாறு சிறப்பாக செயல்படும் டாஸ்மாக்கில் அதன் தொழிலாளர்கள் மட்டும் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையிலேயே காலம் கழித்து வருவதோடு ஊழல் கரை படிந்தே வாழ வேண்டி உள்ளது.







இதற்கு முதல் காரணம் குறைவான ஊதியம். சென்ற வாரத்தில் முதல்வர் மின்சார துறையில் மின் உதவியாளர்கள் எடுக்க இருப்பதாக அறிவிக்கின்றார்கள்.அதில் மின் உதவியாளர்கள் இரண்டுஆண்டு வேலை பழகுனராகவும்,பின்பு காலமுறை ஊதியம் கொடுத்து பணிநிரந்தம் செய்யப்படுவார்கள் எனகூறுகிறார்.அப்படியானால் மின் உதவியாளர்கள் இரண்டாண்டிற்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.ஆனால் 9ஆண்டாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் என்று பணிநிரந்தரம் செய்யப்படுவர்?தினமலர் வெளியிடான சிறுவர்மலர் ஜுன் 24,2011 பக்கம்19ல் 2011ல்விவசாய கூலி தொழிலாளி, கொத்தானர்,கார்பெண்டர்,டீ மாஸ்டர்,பனியன் தொழிலாளி ஆகியோர் சம்பளமும் கிளார்க்,ஆபிஸ் சூப்பிரண்ட் சம்பளமும் எவ்வாறு உள்ளது என கூறப்பட்டுள்ளது.அதில் கொத்தானார் சம்பளம் தினக்கூலி ரூ400 என அதாவது மாதம்ரூ12000 என குறிப்பிட்டு உள்ளது.ஆனால் படித்த பட்டம் பெற்ற டாஸ்மாக் சூப்ரவைசர் பணிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் பெறும் மாத சம்பளம்ரூ5000 மட்டுமே.இதிலும் விற்பனையாளர் சம்பளம்ரூ 3800 முறையே பார் உதவியாளர் ரூ2600 மட்டுமே பெற்றுவருகின்றனர்.இக் குறைந்த சம்பளத்தை கொண்டு கடும் விலைவாசி உயர்வில் குடும்பம் நடந்த முடியாத சூழ்நிலையில் கூடுதல் விலை நோக்கி செல்கின்றனர்.எனவே கூடுதல்விலைவிற்பனைக்கு அதிகாரிகளும்,டாஸ்மாக் நிர்வாகமும்,தமிழக அரசுமே காரணமாகும்.

டாஸ்மாக் ஊழியர்கள் இந்த ஊழியர் விரோதபோக்கிற்கு எதிராக போரட்டங்கள் பலமுறை நடத்தும் பொழுது எதிர்கட்சியாக இருக்கும் பொழுது முதல்வர் அம்மா எங்களை ஆதரிப்பதும்,தற்பொழுதுசிறிய சம்பள உயர்வை சட்டமன்றத்தில் அறிவித்து விட்டு நடைமுறையும் படுத்தாமல் கண்டு கொள்ளாமல் இருப்பது ஊழியர்யிடையே மிகுந்த மன வருந்தம் ஏற்பட்டு உள்ளது.கூடுதல்விலைக்கு விற்பனை மட்டும் முதல்வருக்கு செய்தியாக கிடைப்பதும் டாஸ்மாக் ஊழியர் பிரச்சனைகள் செய்தியாக கிடைக்காமல் இருப்பது ஏனோ? குறைந்த ஊதியம்,பார் உரிமையாளர்களின் டார்ச்சர் ஒரு புறம்,பாட்டில் உடைதலுக்கு எவ்வித நஷ்டஈடும் கிடையாது.கிழிந்த அட்டை பெட்டிக்கும் பணம் கட்டவேண்டும்.ஊழல் அதிகாரிகள் மாத பணம் கேட்டு நெருக்குதல்,சரக்கினை இறக்குவதற்கு செலவு. டாஸ்மாக் பணியாளர்கள் பிரச்சனைகள் ஏராளம்.



டாஸ்மாக் ஊழியர்கள்களின் எதிர்பார்ப்பது என்னவெனில்

*
பணி நிரந்தரம்
*
தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம்.
*
பார்களையும்,கடைகளுக்கு சரக்கு கொண்டு வரும் போக்குவரத்தையும் அரசுடைமையாக்குதல்.
*
முன்தொகைக்கு (டெபாசிட்)வங்கியளவிற்காவது வட்டி.
*
பாட்டில் உடைவிற்கான இழப்பீடு.
*
ஊக்கத்தொகை அதிகரிப்பு.
*
அரசு பணிகளில் முன்னுரிமை

இக்கோரிக்கைகள் யாவும் மிகுத்த லாபத்தில் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தால் ஊழியர்களுக்கு வழங்குவதனால் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டுவிடாது. இக்கோரிக்கைகள் யாவும் நிறைவேறும் பட்சத்தில் இளைஞர்களால் ஆன டாஸ்மாக் நிறுவனம் மேலும் வளர்ச்சி பாதையில் வீறுகொண்டு பயணிக்கும்.தமிழக அரசின் விலையில்லா திட்டங்களுக்கு உதவிடும்.
இவ்வாறு பல நெருக்கடிகளை சந்திப்பதினால் தான் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது கடைசி ஆயுதமாக கூடுதல் விலை நோக்கிச்செல்கின்றனர்.ஒரு நாள் சரியான விலைக்கு விற்றால் கைநஷ்டமே ஏற்படும். டாஸ்மாக் ஊழியர் விட்டில் வறுமையே தாண்டவமாடும்.ஒரு வியாபாரதளத்தில் கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளி சரியானவர்களாக இருந்தால் மட்டுமே அந்த வியாபாரம் லாபகரமாக செயல்படமுடியும். தொடர்ந்து உண்மையாக டாஸ்மாக் ஊழியர்கள் செயல் பட பணிநிரந்தரமும், சரியானஊதியமும் அவசியமாகும்.

.ஷாஜஹான், மதுரை.

கருத்துகள் இல்லை: