திங்கள், 11 பிப்ரவரி, 2013

நல்லோர் வாக்கு பொய்க்காது


பெறுநர்,
மாண்புமிகு அம்மா அவர்கள்,
தமிழக முதலமைச்சர்,
சென்னை
தமிழ்நாடு.

அன்புள்ள அம்மாவுக்கு,

                     பொருள்:டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி   விண்ணப்பம்

                                                               ******,


                   நல்லோர் வாக்கு பொய்க்காது.
தங்களை இக்கடிதம் அடையும் பொழுது தாங்கள் எல்லா நலமும் வளமும் உடல் ஆரோக்கியமும் பெற்றவராக திகழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி இக்கடிதத்தினை சமர்ப்பிக்கின்றேன். டாஸ்மாக் ஊழியர்களான நாங்கள் எங்களை பெற்றதாயை அம்மா என்று அழைப்பதோடு மட்டுமில்லாமல் எங்களுக்கு வேலைகொடுத்த தங்களையும் அம்மா என்று அழைத்து மனதில் பூஜித்து வருகின்றோம்.எங்களுக்கு உயிர் கொடுத்த தாய்க்கு நிகராக தாங்கள் 2003 ல் வேலை கொடுத்து எங்களையும் சமூகத்தில் ஒருவராக அங்கீகாரம் பெறச்செய்தீர்கள். ஆனால்,நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணியாற்றி வருகையில் எங்களுக்கு உண்மையில் சரியான ஊதியமோ,சரியான மருத்துவ சேவையையோ மற்றும் ஒரு பணியாளருக்கான அடிப்படை வசதி எதுவும் செய்யவில்லை அடுத்து செய்ய நினைப்பதாகவும் இந்த டாஸ்மாக் நிர்வாகம் நினைக்கவில்லை டாஸ்மாக் ஊழியர் என்றால் சமூகத்தின் பார்வையில் மிகவும்   கீழானவர்களாகவே மதித்து வரும் நிலையும், ஊழியர்கள் பலரின் திருமணம் கேள்விக்குறியாகவும் மற்றும் நல்ல நிகழ்வுகளில் எங்களை தீண்டதகாதவர்களாகவே பார்க்கும் நிலையும் தொடர்கின்றது.இந்நிலையில் வேறு வழியின்றி வேலை கொடுத்த தாங்களிடம் எங்களின் மனக்குமுறல்களை முறையிடுகின்றோம்.சென்ற ஆட்சியில் தங்களால் நியமனம் பெற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்களை மிகவும் கேவலமாக நடத்தினர்.அது தாங்கள் அறிந்ததே.ஆகஸ்டு 2011 ல் தங்களின் பேட்டியில் " டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை "என்ற அந்த உறுதியின் குரல் எங்களுக்கு தினமும் கேட்டுவருவதால் மட்டுமே நாங்கள் தொடர்ந்து டாஸ்மாக்கில் பணியாற்றி வருகின்றோம். நல்லோர் வாக்கு பொய்க்காது. என்ற அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.எனவே அம்மா அவர்கள் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் ,அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தினை தங்களது பிறந்த நாளில் வழங்குவீர்கள் என டாஸ்மாக் ஊழியர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர். தமிழர்களின் மனதில் நினைக்கும் எண்ணங்களையும் கேட்கும் முன் பூர்த்தி செய்யும் அம்மா அவர்கள் இக்கோரிக்கையினை நிறைவேற்றி 36000 டாஸ்மாக் ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சமூகத்தில் யாருக்கும் குறைவானவர்கள் இல்லை என அங்கீகாரம் பெற செய்யவேண்டுமாய் பணிவுடன் வேண்டுகின்றேன்.கண்டிப்பாக தாங்கள் இக்கோரிக்கையினை நிறைவேற்றுவீர்கள். அன்று அனைத்து டாஸ்மாக் ஊழியர்களின் வீட்டு முகப்புகளில் தங்களின் புன்னகை மாறாத புகைப்படம்  இடம்பெறும் இது எனது வாக்குறுதி.
                  நல்லோர் வாக்கு பொய்க்காது.
                                                                                                                 
இப்படிக்கு,
                                                                                             
தாங்கள்உண்மையுள்ள,
                                                                                                           
.ஷாஜஹான்

கருத்துகள் இல்லை: