திங்கள், 25 பிப்ரவரி, 2013

காவலருக்கு காப்பு






நெல்லை மாவட்டம் தேவர்குளம் மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகையா பாண்டியன் (வயது 38). இவர் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் ஒரு வேனில் திருச்செந்தூருக்கு சென்றார்.

திருச்செந்தூர் டி.பி.ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற முருகையா பாண்டியன், தான் போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் பணம் கொடுக்காமல் மது கேட்டார். அங்கு பணியில் இருந்த சூப்பர்வைசர் மகேந்திரன் (32) ஓசிக்கு மது கொடுக்க மறுத்துவிட்டார்.



இதனால் அவருக்கும் முருகையா பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முருகையா பாண்டியன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மதுக்கடையின் கண்ணாடி பெட்டிகளை உடைத்து, அங்கிருந்த மதுபாட்டில்கள் மீது கற்களை வீசி தாக்கினார். இந்த தாக்குதலில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் மகேந்திரன் படுகாயம் அடைந்தார்.

பின்னர் முருகையா பாண்டியன் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயம் அடைந்த மகேந்திரனை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரர் முருகையா பாண்டியன், அவருடைய நண்பர்களான ராமையன்பட்டியை சேர்ந்த கந்தையா மகன் சுரேஷ் (28), மாடசாமி மகன் ஆறுமுகம் (42), முத்துபாண்டி மகன் மணிகண்டன் (30), ராமையா மகன் செண்பகம், சுடலைமுத்து (38), கல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஈஸ்வரகுட்டி (27) ஆகிய 7 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்கள் வந்த வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 7 பேரும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உலகமெங்கும் உழைப்பவர்கள் தன்னுடைய பணியில் கஷ்டங்கள் பல அடைந்தாலும் ஒரு சிலதுறையினர் தங்களின் உயிரையும் உழைக்கும் போது கொடுக்கவேண்டி உள்ளது. அந்த வரிசையில் சுரங்க தொழிலாளர்கள்,தீயணைப்பு வீரர்கள்,இராணுவ பணியாளர்கள், அணு தயாரிப்புகூடங்களில் பணியாற்றுபவர்கள், தமிழகத்தின் மீனவர்கள் தற்பொழுது டாஸ்மாக் பணியாளர்களும் இந்த வரிசையில் சேர்ந்து உள்ளனர். தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லும் பொழுது தனது மனைவியின் தாலியை கழட்டி வைத்துவிட்டு செல்வதாக கூறுபவர். ஏனெனில் கடல் சீற்றம் மட்டுமில்லாது அண்டைநாட்டு ராணுவ துப்பாக்கி குண்டுக்கும் பயந்தே பணியாற்ற வேண்டி உள்ளது.அதே போல் அரசுபணி என்று நம்பி வேலையில் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் 9ஆண்டுகளாகியும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதோடு குறைந்த சம்பளத்துடனும்,குடித்தப்பின் மிருகமாகும் ஒரு சில குடிமகன்கள் செய்யும் பிரச்சனைகளில்உயிர் இழப்பை சந்திக்கின்றனர். இதில் படுகாயமடைந்த மேற்பார்வையாளர் மகேந்திரன் பூரணகுணமடைய இறைவனை பிராத்திப்பதோடு அவருக்கான முழுமருத்துவ செலவினை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கவும் குற்றபுரிந்த காவலருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க  டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகிறது.

கருத்துகள் இல்லை: